பக்கம்:சிந்தனை மேடை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அந்தச் சுகத்தைப் பூர்ஷாவா மனப் மான்மை’ என்று சோல்லி இகழவும் முடியும். பொருளாதார ஏற்றத் தாழ்வு களையும் கடந்த சமுதாய நம்பிக்கையை மிகவும் ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும். ஒரு நாட்டின் வாழ்க்கை வளமாயிருக்க வேண்டும் என் பதோடு அந்த வளம் எந்த விதத்திலும் தேசீய நலத்துக்குப் புறம்பானதாக இருக்கக் கூடாது. தேசீய நலனையும் ஒரு மைப்பாட்டையும் காப்பாற்றி வளர்ப்பதற்கு அடிப்படை யான தூண்டுதல் ஒவ்வொரு தனி மனிதனுடைய மனத். திலும் சமுதாய நம்பிக்கையும் சேர்ந்து வளர்வதுதான். மனம் நிறையாமை, செளகரியங்களை மாறி மாறி' எண்ணி ஏங்குதல்,-போன்ற சமுதாயக் குறைகளே மறந்து ஆக்கப் பணிகளில் ஈடு பட்டு நட்டை வளர்ப்பதற்குச் சமு. தாய நம்பிக்கையைப் பெருக்கி வளர்க்க வேண்டும். தேசிய ஒருமைப்பாடு, மொழிவாரிப் பிரிவுகளைக் கடந்து நிற்கும் மனிதாபிமானத்தை உருவாக்கவும் சமுதாய நம்பிக்கை நிறைந்தால்தான் முடியும். இன்றைய நிலையில் இந்த நாட்டுக்கு நாம் செய்ய முடிந்த பெரும் பணி சமுதாய நம் பிக்கை உள்ளவர்களாக வாழ்வதும் வாழப் பழக்கிக் கொள் வதும்தான். சுற்றுப்புற உணர்ச்சி இங்கிதம், விநயம் போன்ற வார்த்தைகளைப் பல முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். அகராதியிலும் எழுத்துக் கூட்டத் திலும் மட்டுமே இந்த வார்த்தைகளின் பொருள் நிறை. வடைந்து விளக்கம் பெற்று விடுவதில்லை. மனிதர்களுடைய வாழ்க்கையிலும், நடத்தையிலும் அநுபவபூர்வமாக எந்த அளவுக்குப் பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் இந்தப் பதங்களின் ஆற்றலை நாம் புரிந்து கொள்ள முடியும். இங்கிதம், விநயம் போன்ற குணங்கள் பள்ளிக்கூடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/32&oldid=825905" இலிருந்து மீள்விக்கப்பட்டது