பக்கம்:சிந்தனை மேடை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3贯。 திலோ, கல்லூரியிலோ, பாடப் புத்தகங்களிலோ இப்படிப் பட்டவை என்று எல்லைக்குட்படுத்திக் கற்றுத்தர முடியா தவை. பழக்கத்தினலும், பண்பாட்டினலும் கனிந்து கனிந்து உருவாக வேண்டிய இத்தக் குணங்களை ப்பற்றி இலக்கணம் சொல்லி விளக்கிவிட முடியாதாயினும் சிந்தித்துப் பார்க்: கலாம். தன்னுடைய சுற்றுப்புறத்தை உணர்ந்து தெளிந்து அதற்கேற்பப் பிறரோடு பழகும் பக்குவம் மிகச் சிறந்தது. ஆல்ை இந்த விதத்தில் பழகும் முறை மட்டுமே முழுமை யான இங்கிதம் ஆகிவிடாது. இங்கிதம் என்ற பகுப்பினுள் இப்படிப் பழகும் முறையும் ஓர் அங்கமாகி நிற்க முடியும். சுற்றி நிற்பவர்களின் பார்வை, பேச்சு, முகம், இவற்றை ஒரு விநாடியில் எடை போட்டுவிடுகிற கூர்மையான உணர்ச் சியைச் சிலர் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். இப்படி நுட்பமான மதியுள்ளவர்களுக்கு உலகம் பலவிதங்களில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனே அவரை விநாடி நேரத்தில் அளந்து புரிந்துகொண்டு தீர் மானம் செய்து விடும் வல்லமை இவர்களுக்கு இருக்கும். இவர்களுடைய கண்களும், மனமும், சிந்தனையும் துறுதுறு வென்றிருக்கும். எந்தக் காரியமும் மந்தமாக நடைபெறு வதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஒரு காரியம் மந்தமாக நடைபெறுவதைத்தான் மன்னிக்க முடி யாது. ஆனல் நிதானமாக நடைபெறுவதை ஒப்புக் கொள் ளலாம். மந்தம் வேறு; நிதானம் வேறு. நிதானம் என்பது குணம். மந்தம் என்பது குற்றம். உலகத்தில் நியாயமாக அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு குணத்துக்கும் எதிர்த் தரப் பினதாக ஒவ்வொரு குற்றமும் இருக்கும். நிதானம் என்ற குணத்துக்கு எதிர்த் தரப்பில் மந்தம் என்பது குற்றம். நிதானமாக இருக்க வேண்டிய இடத்தில் நிதானமாக இல்லாதது ஒரு குற்றம். நிதானமாக இல்லாததோடு மந்த, மாயிருப்பது மற்ருெரு குற்றம். பிறரோடு பழகும் முறையில் மிக மென்மையான பல குணங்கள் சேர்ந்ததோர் உயர்ந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/33&oldid=825907" இலிருந்து மீள்விக்கப்பட்டது