பக்கம்:சிந்தனை மேடை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 விறுக்க நடந்து போவார்கள் முன்னேற்றமடைந்த வெளி நாடுகளில் கார் சவாரி, விமான சவாரி எல்லாம் செய்யப் போகிற காரியத்தின் அவசரத்தை குறிக்கும் அடையாள மாகவும் நேரத்தை சிக்கனப்படுத்திப் பயனுக்குகிற சாதன மாகவும் கருதப்படுகிறது. அவற்றுக்கு இவை தவிர அங்கே வேறு மதிப்பில்லை. இந்தத் தேசத்திலோ, கார் சவாரி, விமான சவாரி, முதல் வகுப்புப பயணம் எல்லாம் அவற்றில் ஈடுபடுகிற மனி தனுடைய ஸ்டேட்டஸ் ஒன்றை மட்டும் வெளிப்படுத்தவும் புரிந்து கொள்ளவுமே பயன்படுகிறது. குணங்களாலும், புத் தியினலும், தூய்மையிலுைம் மனிதனுடைய ஸ்டேட்டஸ்’ புரிந்து கொள்ளப்படுகிற நிலை வரும் வரை இலட்சியவாதி களுக்குவேதனைதான். ஏனென்ருல் அவர்களுடைய இலட்சிய மும் உலகத்துக்குப் புரியாது அவர்களும் உலகத்தில்ை விளங்கிக் கொள்ளப்பட மாட்டார்கள். கண்னுேட்டம் தாட்சிண்யம், என்ற வார்த்தைக்குச் சரியான பொருளுள்ள தமிழ்த் தொடர் கண்ணுேட்டம்’ என்பது. இதை இன்னும் நன்ருக விளக்க முயலலாம். ஒரு மரத்துக் துக்கும் அந்த மரத்தடியில் நிற்கிற ஒரு மனிதனுக்கும் என்ன வேறுபாடு! - பச்சைப் பசேரென்று செழித்து நிற்கிற அந்த மரத்தில் ஏறி நாலு கிளையை எவனே வெட்டிக் கீழே வீழ்த்திவிட முயனருல் கீழே நிற்கிற மனிதன், ஐயோ! பச்சை மரத்தை இப்படி வெட்டுகிருர்களே என்று நினைக்கவாவது முடியும். அதே சமயத்தில் கீழே நிற்கிற மனிதனுடைய விரோதிகள் யாராவது ஓடி வந்து அவனுடைய கையையோ, காலையோ முறிக்க முயன்ருல் அவனுக்கு மேலேயிருக்கிற மரத்தினால் அதைப்பற்றி அநுதாபமாக நினைக்கவும் கூட முடியாது. இந்த வேறுபாடுதான் மனிதனுக்கும் மரத்துக்கும் நடுவில் இருப்பது. - > - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/37&oldid=825915" இலிருந்து மீள்விக்கப்பட்டது