பக்கம்:சிந்தனை மேடை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தடுமாறும் சொற்கள் பொதுக்கூட்டங்களில் பேசும்போது சில கற்றுக்குட்டிப் பேச்சாளர்கள் என்ன சொல்லைச் சொல்லுகிருேம் என்பதை உணராமல் தடுமாறிப் போய்ப் பேசுவதுண்டு. 'இத்துடன் நான் பேச எடுத்துக் கொண்ட காலம் முடிந்து விட்டதனால் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்" என்று சொல்லவேண்டிய இடத்தில், இத்துடன் என் காலம் முடிந்து விட்டதனால் சொற்பொழிவை முடித்துக் கொள் கிறேன்’ என்று சொல்லிக் கூட்டத்தைத் திணற அடித்தார் ஒர் இளைஞர். "இன் மை லாஸ்ட் டேய்ஸ்’ என்று பதவி விலகிப்போகும் ஒருவர் ஆங்கிலத்தில் தொடங்கிய பேச்சை அருகிலிருந்த மொழி பெயர்ப்பாளர், "எனது இந்த அந்திம நாட்களில்’ என்று மொழிபெயர்த்துப் பேசியவர் ஏதோ மரணப் படுக்கையிலிருந்து கொண்டு பேசுவதைப் போன்ற களேயை உண்டாக்கினர். இன்னெரு கூட்டத்தில் ஊரெல்லாம், இப்படிப் பிரஸ் தாபமாக இருக்கிறது என்பதைச் சொல்ல வந்த பேச்சாளர் ஒருவர் வாய் குழறி, ஊரெல்லாம் இப்படிப் பிரசவமாக இருக்கிறது’ என்று சொல்லிக் கூட்டத்தில் இருந்தவர்கள் கொல் லென்று சிரிக்கும்படி செய்தார் இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ தடுமாற்றங்கள் நிகழ்வதுண்டு. ஒருவர் காலஞ்சென்றதை யொட்டி நடைபெற்ற அநுதாபக் கூட்டம் ஒன்றில் இப்படி ஒரு குழப்பத்தைப் பேச்சாளர் ஒருவர் உண்டாக்கினர். அந்தப் பா ழ ா ய் ப் போ ன பேச்சாளருக்குக் காலஞ்சென்றுவிட்ட பிரமுகரின் பெய. ரைக் காட்டிலும் அவருக்காகக் கூட்டிய அநுதாபக் கூட்டத் துக்குத் தலைமை வகித்துக்கொண்டிருந்த பிரமுகரின் பெயர் தான் நன்ருக நினைவு இருந்தது. எனவே குறிப்பிட்ட பேச்சாளர் பேசும்போது, இன்றைக்குக் காலம் சென்ற ......” என்று தொடங்கி உயிரோடு குத்துக் கல்லாய் நாற் காலியில் வீற்றிருந்த தலைவரின் பெயரைச் சொல்லி விட்டார். அந்தப் பேச்சாளர் இப்படி வாய் குழறி இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/44&oldid=825931" இலிருந்து மீள்விக்கப்பட்டது