பக்கம்:சிந்தனை மேடை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·连8 சமூகத்தை இவர்கள் மதிக்கிற விதமே போவித்தன்மை உள்ளதாகி விடுகிறது. போலியாக மதிக்கப் பழகிக் கொள்ளும் பல பழக்கங்கள் நாகரிக உலகிற்குத் தேவை என்று இன்றைய நிலையில் கருதப்பட்டாலும் அப்படிப்பட்ட மதிப்பு ஒரு தொற்று நோய். சமூகத்தில் நியாயமும், சத்திய மும் காற்றுப் பட்டுப் பட்டுக் கரையும் கற்பூரம் போலப் படிப்படியாகக் கரைவதற்குத் துணை நிற்பது இந்தப் போலி மதிப்பீடுதான். வேகமான சுக துக்கங்கள் இன்றைய வாழ்க் கையில் மனிதனுடைய உடலையும் பாதிக்கின்றன. எதிலுமே அவசரம் அதிகம். சுகத்தினாலும் பிடிபடாத மகிழ்ச்சி. துக்கத்திலுைம் பிடிபடாத வேதனை. எந்த உணர்ச்சியான லும் அதற்காகப் பதற்றமடைதலை வேகமான வாழ்வில் காண்கிருேம். இரத்த அழுத்தமோ இரத்தக் கொதிப்போ, ஏற்படுவதற்குக் காரணமான நிலைகள் என்று இவற்றைச் சொல்லுவதில் பிழையில்லை. உலகத்துச் சுக துக்கங்களால் சலிப்படையாத ஒரு நிலையை உபசாந்தி!' என்று பழைய காலத்துப் பெரியோர் கள் போற்றிப் பேணி வந்தார்கள். சுகதுக்கங்களிளுல் சலிப்படையாதவன் திரைப்பட வாழ்க்கைபோல் ஒடுகிற நிகழ்ச்சிகள் உள்ள விரைவான வாழ்க்கைக்குத் தவிப்பு தில்லை. அவசரமாக வாழ்வதற்கும் பளிர் பளீரென்று அவ்வப் போது மின்னிப் பிறரைக் கவர்ந்து கொண்டேயிருப்பதற்கும் ஆசைப்பட்டு நிலையான உழைப்பையும், மதிப்பீட்டையும் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. மின்னல் ஆசை நாடகங்களும், திரைப்படங்களும் பொழுது போக்குக் கலைகள். மழையைப்போல் பருவங்களில் மட்டும் பெய்து விழ்கிற ஆசையை விடச் சூரியனைப் போல் நாள் தவருமல் உதித்துக் கொண்டிருக்கிற நிலையான கலைக் குணங்கள் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/50&oldid=825944" இலிருந்து மீள்விக்கப்பட்டது