பக்கம்:சிந்தனை மேடை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. காலத்தை எதிர்த்து நீந்தும். குத்து விளக்கைப்போல் ஒரு சீராக நிதானம் தவருமல் பிரகாசம் தருகிற வாழ்க்கையை மறந்துவிட்டு அவ்வப்போது மின்னிப் பிறருடைய கண்ணேப் பறிக்கும் வாழ்வுக்குப் பறக்கும் தவிப்பு சான்ருேர்களால் உயர்வானதென்று கணிக்கப் பட மாட்டாது. அநுபவங்களிலும் நனையாமலும், காயாமலும் நாம் விரும்புகிற விதமான சூழ்நிலைகள் திடீர் திடீரென்று ஏற். பட்டு விடவேண்டுமென்று கணுக் காண்பது திரைப்படத்தில் சுகங்கள் திடும் திடுமென வருவதுபோல் வேகமானவை. ஆளுல் துரதிருஷ்டவசமாக மின்னி மின்னி மறைய வேண்டுமென்ற ஆசைதான் இன்று பலருக்கு இருப்பதாகத் தெரிகிறது. நிலையானதும் கண்ணேப் பறிக்காததுமான நிதானமுள்ள பிரகாசத்துக்கு ஆசைப்படாமல் கண்ணைக் குத்தி இழுப்பதுபோல் கவரும் ஒளி சிதறுகிற பிரகாசத் துக்குத்தான் இன்று பலர் ஆசைப்படுகிருர்கள். இந்த, ஆசையை நாடக மேடைச் சுகங்கள் என்பதா, திரைப்படச் சுகங்கள் என்பதா-என்று சொல்லத் தயங்கினுலும் நாடகத்தைவிட மின்னுந் தன்மையும் வேகமும் அதிக மென்பதனால் "திரைப்படச் சுகங்கள்’ என்றே கூறலா மெனத் தோன்றுகிறது. இளமைப் பருவத்துச் செல்வங்கள் என்று இன்று அளக்கப்பட்டு இந்தப் பரந்த பாரத தேசத் தின் நாளைய மனிதர்கள் என எதிர்பார்க்கப்படுகிற பிள்ளை கள் பலரிடம் இப்படி மின்னி மின்னி மறைய வேண்டு மென்ற ஆசைதான் அதிகமாக இருப்பதை இன்று காண் கிருேம். இது இந்த நாட்டுக்கு நல்லதில்லை என்று கவலைப் படுவதைத் தவிர நாம் இப்பேர்து வேறென்ன செய்யலாம்? விரைந்த வளர்ச்சி நிதானமாகவும், படிப்ப்டியாகவும் உழைத்து முன் னேற வேண்டிய இளைஞர்கள் கூட இன்று விரைந்த வளர்ச் சிக்குத் தவிக்கிருர்கள். அறத்தையும் ந்ேர்மையையும் பற்றி ஆசிரியர்கள் கற்பிக்கும்போது எதிரே அமர்ந்து கற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/51&oldid=825948" இலிருந்து மீள்விக்கப்பட்டது