பக்கம்:சிந்தனை மேடை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ணஞ் சிறு தவக் குடில்களில் இருந்து கொண்டு பேரரசர்களின் பிள்ளைகளும் தங்களே இருப்பிடம் தேடி வந்து கற்கும்படி அறிவின் கம்பீரத்தோடு வாழ்ந்த காலம் தொடங்கிக் கொல் லம் ஒடு வேய்ந்த விசாலமான வகுப்பறைகளில் ஒட்டு வெக் கையையும் வீட்டு வாழ்க்கையின் வறுமை வெக்கையும் சேர்த்து அனுபவித்துக் கொண்டு ஒடுங்கி நைந்த தோற்றத். தோடு வாழும் இன்றைய வாத்தியார்’கள் வரை அனைவரும் ஆசிரியர்கள்தாம். இன்றைக்குப் பொது மேடைகளில் பேசு கிறவர்கள் புகழ்வதற்கு யாரும் கிடைக்காத நேரத்தில் ஆசிரியர்களைப் பற்றிப் புகழ்வது உள்பட மிக மிகப் பழங் காலத்துப் புகழ்ச்சி மொழியாகிய, "எழுத்தறிவின் இறைவன் ஆகும்” என்பது வரை எல்லாவற்றையும் இப்ப்ோது சிந்திக்கலாம்: புகழில் என்ன இருக்கிறது? மனத்திலிருந்து பிறவாமல் தாவிலிருந்தும், உதடுகளிலிருந்தும் பிறக்கிற வெறும் புகழ்ச்சி செவிகளை மட்டுமே நிறையச் செய்யும். ஆனல் இன்றைய ஆசிரியனுக்கு வயிறும் நிறைய வேண்டுமே! அப்படி வயிறு நிறைவதற்குத் தன் தொழிலும் பயன்பட்டாக வேண்டுமே! எப்ப்ோதோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத் தில் வாழ்ந்த ஆசிரியர்கள் கற்பதற்காகத் தங்களைத் தேடி வந்து குருகுல வாசம் செய்யும் மாணவர்களுக்குத் தத்தம் ஆசிரமங்களிலேயே உணவளித்து வளர்த்துப் பேணி அவர் களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் எப்படி எப். படி உருவாக வேண்டும் என்பதையும் கல்வியோடு சேர்த்தே கற்பித்திருக்கிருர்கள். இன்றைய நிலையோ முற்றிலும் மாறு: பட்டது; வேறுபட்டது. வகுப்பறைகளில் கழியும் சில மணி நேரங்களுக்குப் பின் ஆசிரியனும், மாணவனும் தனித்தனியே பிரிந்து விடுவதைப் போல் இன்று வாழ்க்கையும் கல்வியும். கூடத் தனித் தனியே பிரிந்துதான் இருக்கின்றன. வேத காலத்திலும், துரோணர் போன்ற இதிகாச கதா பாத்திரங்களைப் பற்றிய நினைவு உண்டாகப்படுகிற காலத்தி லும் கல்வி கற்பிப்பது என்ற செயல் கோயில் வழிபாட்டைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/54&oldid=825951" இலிருந்து மீள்விக்கப்பட்டது