பக்கம்:சிந்தனை மேடை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எப்போ தாவது அதில் சலிப்பு அடைவதற்கும் இடமிருக்கிறது. ஆசிரியர்கள் ஏணியைப் போல் பிறர் ஏறி ஏறி மேல் படிக்குச் செல்வதற்குத் தாங்கள் சாதனமாக மட்டும் அமைந்து அவ் வளவில் நின்றுவிடுகிருர்கள். இந்தச் சிந்தனையை வேருெரு கோணத்தில் மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் வேதனையாகக் கூட இருக்கலாம். திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியார் திரு வேங்கடத்திடம் அரிச்சுவடி படித்த மன்னர்சாமி சிலபல ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேறி அதே மாவட்டத்துக்குக் கலெக்டராகக் கூட வந்துவிடலாம். வாழ்க்கைத் தொல்லை களும், குடும்பத் துன்பங்களும் முன்னேற முடியாமல் தடுக் கிற பட்சத்தில் வாத்தியார் திருவேங்கடம் அதே ஒட்டுப். போட்ட சட்டையும் பழுப்பேறின வேட்டியுமாக அரிச் சுவடி சொல்லிக் கொடுத்தே தம் காலத்தைக் கழித்து விடுவார். பதவி ஏற்றத் தாழ்வுகளையோ, செல்வாக் கையோ இப்படிக் கணித்துப் பார்த்து முடிவு சொல்வது கூடாதுதான். ஆனாலும் இன்றைய சமுதாய வாழ்வில் சரா சரி மதிப்பீடுகள் எல்லாமே இப்படித்தான் இருக்கின்றன. எனவே நாமும் வேறு விதமாக மதிப்பீடு செய்ய முடிவ தில்லை. சமூகத்தில் ஆசிரியர்களுடைய மதிப்பு பெருக வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிருர்கள், ஒப்புக் கொள்கிருர்கள். ஆனல் எந்த விதத்தில் அதைப் பெருகச் செய்வது?’ என்ற கேள்வி வரும்போதுதான் தயக்கமாக இருக்கிறது. "கற்பிப்பதும் ஒரு தொழில்: அதனாலும் வருவாய் தேட முடியும்’ என்ற நிலையில் உள்ள இந்த நூற்ருண்டில் ஒர் ஆசிரியன் அடைய முடியாத அவ்வளவு சமூக மதிப்பைக் கற்பிப்பது தொழிலாக இல்லாத காலத் தில் முனிவர்களும், பெரியவர்களும் அடைந்திருக்கிருர்கள். மாபெரும் மன்னர்கள் கூடத் தங்களைத் தேடி வந்து வணங்கும்படி அடர்ந்த காடுகளிலும், நதிக் கரைகளிலும் ஒதுங்கி வாழ்ந்துகொண்டே தெய்வங்களைப் போல மதிக்கப் பட்டிருக்கிரு.ர்கள் அந்தப் பெரியவர்கள். சொந்த அமைச் சர்களிடமும் கலந்து ஆலோசிக்க முடியாத பெரிய பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/56&oldid=825955" இலிருந்து மீள்விக்கப்பட்டது