பக்கம்:சிந்தனை மேடை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 காரியங்களே இப்படி ஒதுங்கி வாழ்ந்த முனிவர்களையும், பெரியவர்களையும் தேடிப் போய்க் கலந்து ஆலோசித்திருக் கிருர்கள் பழைய காலத்து அரசர்கள். இன்றைய ஆசிரி யனைத் தேடி (திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியனே, கல்லூரிப் பேராசிரியனே, யாராக இருந்தாலும் சரி) இப்படிப்பட்ட மாபெரும் அரசியல் பிரச்னைகள் எதுவும் வரப் போவதில்ல்ை. இன்றைய ஆசிரியர்களுக்குள்ள வேதனைகளே ஒவ்வொன்ருக எண்ணிப் பார்த்தால் அவர்கள் இந்தச் சமூகத்தை ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள். - குறைந்த கவர்ச்சி ஒரு சிறிய அரசாங்கக் காரியாலயத்தில் இரண்டாந் தரத்துக் குமாஸ்தாவாக வேலை பார்க்கிற ஓர் இளைஞனையும், உயர்தரப்பள்ளியில் ஆசிரியணுக வேலை பார்க்கிற ஒர் இளைஞ னையும், முன் நிறுத்திப் பெண்ணுக்குத் திருமணத்துக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிற பெற்ருே.ரிடம் கேட்டால் குமாஸ்தாவைத்தான் முதலில் நாடுவார்கள். மனித சமு தாயத்தை உருவாக்குகிற புனிதப் பணியைச் செய்கிறவர் கள்’ என்ற ஆசிரியப் பணியின் இலட்சிய அடையாளங்களை யெல்லாம் பொது உலகத்தில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலே’ என்ற தரக் குறை வான பழமொழியை உண்டாக்கியதே பொதுஉலகம்தானே? சேம நிதி, ஒய்வுக்கால ஊதியம், மாணவர்கள் பல ரால் புகழப்படும் நிலை- எல்லாம் இருந்தும்கூட இந்தத் தொழில் ஏதோ ஒரு விதத்தில் கவர்ச்சி குன்றியதாகவே கருதப் படுகிறது. உத்தியோகம் தேடி ஆவலோடு புறப்படு கிற பட்டதாரி இளைஞர்களும் கம்பெனிகள, சர்க்கார் வேலே வியாபாரம், பொறியியல் துறை வேலை, இவைகளுக்கு எல்லாம் முயன்று இயலாமையோடு அலுத்த பின்பே, சரி சரி கடைசியாக டீச்சர்ஸ் டிரெயினிங்குக்காவது போய்ச் சேரலாம்.’’ என்ற மு. டி வோடு வருகிருர்கள். தனியார் துறைக் கம்பெனிகளிலும், வியாபார நிறுவனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/57&oldid=825957" இலிருந்து மீள்விக்கப்பட்டது