பக்கம்:சிந்தனை மேடை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葛7 உருவாக்குகிருேம்’ என்ற பெருமிதமான நம்பிக்கையோடு ஒதுங்கி வாழ்ந்தார்கள். இன்றைய ஆசிரியர்கள் அப்படி வாழ முடியாது. மற்றத் துறையில் இருப்பவர்களுக்கு உள்ளதைப் போலப் பொதுவாழ்க்கையின் எல்லா விதமான கவலைகளும் இன்றைய ஆசிரியர்களுக்கும் உண்டு. அதே சமயத்தில் பொதுவாழ்க்கையின் எல்லா விதமான வசதி களின் கதவுகளும் இவர்களுக்காகத் திறக்கப்படவில்லே, அதனுல்தான் இந்தத் தொழில் பலவிதத்திலும் கவர்ச்சி குறைந்ததாகப் போய்விட்டது. - கல்விக் கூடங்கள் ஆசிரியர்கள் நிலைதான் இப்படி என்ருல் கல்விக் கூடல் களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முக்கால் மணி நேரத்துக்கு ஒரு பாட வேளையாகப் பிரித்து, இந்த முக்கால் மணி நேரத்துக்கு இந்தக் கனவைத்தான் காண வேண்டும் என்று வற்புறுத்திக் கன்வு காணச் செய்வது போல் எதிலும் மனத்தை ஆழ விடாமல் செய்கிறது இன் றைய படிப்பு. இளம் பருவத்து மாணவன் இந்த நூற்ருண் டில் தன்னுடைய ஆசிரியரை எப்படி அளந்து பார்த்து மதிக்க முடியும் என்பதையும் சிறிது சிந்திக்கலாம். மனம் பக்குவப்படாத பதினறு பதினேழு வயது மாண வன் தன் கண்களுக்கு முன்னுல் தெரிகிற உலகத்தில் படா டோபமாக வாழ்கிற பலரையும் அப்ட்டி வாழ முடியாத தன் ஆசிரியரையும் இணைத்து எடை போட்டுப் பார்ப்பான். அவனுடைய நிறுவையில் ஆசிரியர் பெரும்பாலும் எடை குறைந்தே தோன்றுவார். சமூக வாழ்க்கையில் எந்த ஆடம் பரங்களையும் கடைப்பிடிக்க இயலாத எளிய வருவாய் உள்ள இனம் ஆசிரிய இனம். கப்பல் போல் நீளக் காரில் தனி ஆளா கப் பவனி வருகிற திரை வானத்துத் தாரகைகளையும், வெள் ளம் வெள்ளமாய்க் கூட்டம் கூட மேடையேறி மாலேயும் கழுத்துமாக நிற்கும் அரசியல் பிரமுகரையும், விநாடிக்கு இலட்ச ரூபாய் வரவு செலவு செய்யும் வியாபாரியையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/59&oldid=825961" இலிருந்து மீள்விக்கப்பட்டது