பக்கம்:சிந்தனை மேடை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பார்த்துப் பார்த்து ஆச்சரியப்படத் தொடங்கும் பிஞ்சு உள்ளங்கள் அவ்வாறே தன் ஆசிரியரிடமும் ஆச்சரியப்படத் தக்க சக்தி ஏதாவது இருக்கிறதா என்று தேடுகின்றன. புத்தி பின் பெருக்கமே ஒர் ஆச்சரியம்தான். ஆனால் புத்தியின் பரப் பையும் பெருக்கத்தையும் மட்டுமே ஆச்சரியமாக மதிக்கும் மனப் ப்க்குவம் வேக மயமான இந்த நூற்ருண்டில் எத்தனை இளம் பிள்ளைகளுக்கு இருக்க முடிவும்? இருந்தால்தான் நாட் டின் சூழ்நிலை மிகவும் நன்ருகி விடுமே? பள்ளிப் படிப்பைவிட வேறு ஞாபகங்கள் அதிகமாகச் சூழ்ந்துள்ள இந்தக் காலத்தில் பொது வாழ்வில் கல்விக் கூடங்களின் எல்லேயில் வகுப்பு வேளைகளில் மட்டும்தான் ஒரளவுக்கு இன்றைய மாணவரால் ஆசிரியனையும் வியக்க முடிகிறது. எஞ்சிய பெரும் போதெல்லாம் அவர்கள் வியப் பதற்கு வேறு பல பெருமைகள் அவர்களைச் சூழ்ந்து கொள் கின்றன. எனவே பழைய காலத்துக் குரு பக்தியைப் போலக் கட்டை விரலை அரிந்து தருகிற தீர மாணவர்களை இன்று காண முடியாது. ஒரு வேளை வாத்தியாருக்குக் கட்ட்ை விரல் நஷ்டத்தை உண்டாக்குகிற புதுவிதமான திர மாணவர்கள் வேண்டுமானல் இந்த நாளில் கிடைக்கலாம். கல்விக் கூடங்களில்ஒழுக்கமும், கட்டுப்பாடும் பண்பும் கற் பித்து மாணவர்களை உருவாக்குவதில் கவனம் குன்றி வெறும் பரீட்சைக்கு உருவாக்குவதில் மட்டும் கவனம் பெருகியுள்ள காலம் இது பரீட்சை எழுத உருவாக்கப் படுகிற மாணவர் களுக்கு அதற்கான தயாரிப்புக்களைத் தவிர வேறு எதுவும் கற்பிக்க நேரமும் அவகாசமும் இல்லை எனலாம். ஒழுக்கத் தையும், பண்பாட்டையும் கோட்டை விட்டு விட்டுக் கணக் கையும், விஞ்ஞானத்தையும் மட்டுமே வளைத்து வளைத்துக் கற்பித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? விதை நெல்ல்ை அவித்துச் சோருக்கினல் எதிர்கால விளைவுகளைப் பற்றி என்ன சொல்வது? - - - எல்லாக் கட்டிடத்துக்கும் அடிப்படை அவசியம் எந்த விதமான கல்வியை வேண்டுமானலும் கற்பியுங்கள். ஆனல் அதற்கு அடிப்படையாக ஒழுக்கமும், பண்பாடும் அமைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/60&oldid=825965" இலிருந்து மீள்விக்கப்பட்டது