பக்கம்:சிந்தனை மேடை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó6 அதை முடித்ததும் அதற்கென்று கிடைக்கிற பயனைப் பெற் றுக் கொண்டு மனநிறைவு அடைந்து விடுவான். ஆனல் ஒரு கலையின் மன நிறைவோ, புகழோ, இப்படிச் சுருக்க மாகக் கிடைத்து ஓய்ந்துவிடக் கூடியதில்லை. கலையின் நயத் தைப் போலவே அதற்குக் கிடைக்கிற புகழும் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தது. தலைமுறை தலைமுறையாக வளர்ந்து கொண்டே போகக் கூடியது. புகழ் கணிக்கப்படுகிற காலத் துக்கு முற்றுமிட மில்லாமல் வளர்ந்து கொண்டே போகக் கூடிய இந்தப் பெருமை கலைத்துறைக்கு மட்டுமே உண்டு. ஆளுல் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்த அந்தக் கலைகளெல் லாம் இன்று ஆற்றல் குன்றித் தேய்ந்து போய் நிற்கின்றன. "இந்த உலகத்தை இன்றும், நாளையும், அழகாய் வைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணமானவற்றில் தன் கலேயும் ஒன்று’-என்ற பெருமிதத்தோடு நிமிர்ந்து நின்றுகொண்டு பலரைக் கைகூப்பித் தொழச் செய்த இலட்சியக் கலை வீரர் களைப் பற்றி நினைத்து விட்டு இன்றைய நிலையையும் நினைத் தால் மனத்துக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. தன்னுடைய மனத்தின் எண்ணங்களையும் தவத்தையும், அந்தத் தவத்தின் ஆற்றல் வாய்ந்த அழகுகளையும் செதுக்கிச் செதுக்கிக் கல்லைத் தெய்வமாக்கும் சிற்பியின் கைகளை எந்த விலையால் மதிப்பிட முடியும்? நினைப்பில் கற்பித்துக் கற்பித்து அழகாக்கி வர்ணங்களாலும், கோடுகளாலும் அதைக் கண் ஆணுக்குத் தென்படும் உருவமாய்ப் படைக்கிற ஒவியனின் சாதனைக்குத்தான் விலை ஏது? மனிதனேடு மனிதன் ப்ேச முடிந்த மொழியைக்காட்டி லும் ஒரு படி உயர்வாகச் சென்று தெய்வத்தோடு மனிதன் பேசுவதற்கு ஒருமொழி வேண்டுமென்றஇலட்சியத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சங்கீதத்துக்கும் எவரால் விலை கணிக்க முடியும்? சங்கீதம் என்பது உயர்ந்த தரத்து அன்பைப் பேசு வதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட மொழி. தெய்வத்தின் மேலோ, அல்லது தெய்வத்தன்மை வாய்ந்தவர்கள் மேலோ ஏற்படுகிற பக்தியை அல்லது அன்பைப் பக்குவமாக வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/62&oldid=825969" இலிருந்து மீள்விக்கப்பட்டது