பக்கம்:சிந்தனை மேடை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 விடுவதற்குக் கண்டுபிடிக்கப் பெற்றிருக்கும் பண்பட்ட மொழியே சங்கீதம். அது ஒரு மொழி. அன்பில் பல்வேறு நிலைகளை மிகவும் இனிமையாகவும், சுருக்கமாகவும் பேச முடிந்த மொழி. இன்று இசையும் அதன் பயனும் எப்படி எப்படியோ உபயோகப் படுகின்றன என்ருலும் ஆதியில் உயர்ந்த தரத்து அன்பை இனிமையாகவும். சுருக்கமாகவும் பேசுவதத்கு ஒரு புதிய பாஷையாகவே அது பிறந்த தென் பதை எவரும் மறுப்பதற்கில்லை. கால தேச வர்த்தமானங் களினால் இந்தக் கலைகளும் இவற்றின் இலட்சியங்களும் இன்று தேய்ந்து போயிருக்கின்றன; ஆனால் அழிந்து போங் விடவில்லை என்ப்து ஓரளவு நம்பிக்கை தருவதாயிருக்கிறது. நலிந்த வாழ்க்கை சிற்ப சாத்திரங்களையும், கோயில் அமைப்பு முறை ஆக மங்களையும், முறையாகப் பயின்று தேர்ந்த ஸ்தபதியார் ஒருவரைச் சமீபத்தில் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த சில மணி நேரத்திலே மனம் குமுற அவர் வெளியிட்ட பல கருத்துக்களை என்றும் மறக்கவே முடியாது. அவை உங்களோடும் பகிர்ந்துகொள்ள ஏற்ற கருத்துக்களே. "எங்கள் தொழிலை விடப் பாய்முடைகிறவன், கூடை முடைகிறவன் தொழில் இலாபகரமாயிருக்கிறது ஐயா! மூன்று மாதத்தில் வாங்கிய பாய் பழையதாகியவுடன் புதுப் பாயைத் தேடி வந்து வாங்குவார்கள். கூடை கெட்டுப் போய் விட்டால் புதுக் கூடை வாங்குவார்கள். எனவே பாய் பின்னுகிறவனுக்கும், கூடை முடைகிறவனுக்கும் அவன் படைக்கிற பொருள்கள் அடுத்தடுத்துச் செவழிந்தி ப்டி இலாபம் தந்து கொண்டே யிருக்கும்! ஆனால் நான் செதுக்கிக் கொடுக்கிற சிலையும், கட்டிக் கொடுக்கிற கோயி லும், என் காலத்துக்குப் பின்பு பல தலைமுறையானலும் அழிவோ, சேதமோ இல்லாமல் நிலைத்து விடுகிறதே! பழைய காலத்தில் ஏதாவது ஒரு கோவிலுக்கு ஒரு சிை செதுக்கிக் கொடுத்திருந்தாலும் அந்த ஒற்றைச் செயலுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/63&oldid=825971" இலிருந்து மீள்விக்கப்பட்டது