பக்கம்:சிந்தனை மேடை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காகவே எங்கள் வாழ்நாள் முழுதும் எங்களை ஆதரித்தும் பாதுகாக்க மன்னர்களும் அவர்களுடைய பரந்த மனப்பான் மையும் துணையாக இருக்கப் பெற்ருேம். இப்போது அப் படி எங்களைப் பேணுவதற்கு யார் இருக்கிருர்கள்? வீடுகளே யும், பெரிய பெரிய காரியாலயங்களையும், திட்டத்தோடு கட்டிக் கொடுக்க என்ஜினியர்கள் புதிய யுகத்தின் வரு வாய் நிறைந்த சிற்பிகளாகத் தோன்றி விட்டார்கள். எங் களைப் பொறுத்தவரையில் எங்கள் பாட்டன், மூப்பாட்டன் தலைமுறையில் கட்டப்பெற்ற கோயில்கள் கூட இன்னும் திடமானவையாக இருக்கின்றன. எப்படி நாங்கள் வயிற். றைக் கழுவுவதென்று சொல்லுங்கள். இலட்சியத்தைப் ப்ற்றி அப்புறம் பேசலாம்.’’ அந்த ஸ்தப்தியாரிடமிருந்து மனக்கொதிப்போடு பிறந்த இந்தப் பேச்சைக் கேட்ட பின்பு எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. கூடை முடைகிறவனையும், பாய் பின்னுகிறவனையும் விட நிலையான அழகைப் படைக் கிற மதிப்பு வாய்ந்த கலைஞன் ஒருவன் தன் தொழிலில் அன் ருட வாழ்க்கைக்குச் சோறு போட முடியாததாயிருக்கிறதே. என்பதை உணர்ந்து வருந்திப் பேசுகிறபோது பொய்யான சமாதானங்களேக் கூறுவதற்கு என் மனம் துணியவில்லை. இந்தச் சிற்பியைப் போலவே அன்ருட வாழ்க்கைக்குத் தொல்லைப்படுகிற சங்கீத வித்துவான்களும் இருக்கிருர்கள். அன்ருட வாழ்க்கைக்குத் தொல்லைப்படுகிற ஒவியர்கள் இருக்கிரு.ர்கள். அன்ருட வாழ்க்கைக்குத் தொல்லைப்ப்டு கிற கவிஞர்கள் இருக்கிரு.ர்கள். சில உயர்ந்த கலைகளும், அவற்றைப் புரிந்து கொள்ளுகிற சமுதாய இலட்சியமும் இன்று நலிந்து போய் விட்டன. அப்படி அந்தக் கலைகளும், அவற்றைப் புரிந்துகொள்கிறவர்களும் நலிந்து போய் விட்ட தன் காரணமாகவே அவற்றை ஆளும் கலைஞர்களின் வாழ்க்கையும் பொருளாதார ரீதியாக நலிந்து போய் விட் டது. இந்தப் பிரச்னையின் அவசிய அநாவசியங்களைச் சிந்திக் கும்போது பாதிக்கப் பட்டவர்களின் தொகை அதிகமா, குறைவா என்பதை வைத்து மட்டும் சிந்திக்கக் கூடாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/64&oldid=825973" இலிருந்து மீள்விக்கப்பட்டது