பக்கம்:சிந்தனை மேடை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63: பாதிக்கப்பட்டகலைகளின் அவசிய அநாவசியங்களை வைத்தே சிந்திக்க வேண்டும். சிற்பமும், சித்திரமும், சங்கீதமும் சமூ. கத்துக்கு அவசியமில்லை என்று யாரும் துணிந்து கூறிவிட முடியாது. இன்று அவை எப்படி எப்படித் தேவைப்படுகின் றனவோ அப்படித் தேவைப்படுகிற விதங்கள் வேண்டு: மால்ை நலிந்து ப்ோய் மாறியிருக்கலாம். வளர்ச்சியும் தளர்ச்சியும் சிற்பிகளுக்குள்ள அத்தனை அதிகமான கவலை ஒவியர் களுக்கு இல்லை. ஒவியர்களுக்குள்ள அத்தனை அதிகமான கவலை சங்கீதத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இல்லை. ஆனல் மொத்தத்தில் எல்லாருக்கும். ஏதேதோ கவலைகள் இருக்கின்றன. பத்திரிகைகளுக்கும், காலண்டர்களுக்கும் படம் போட்டுக் கொடுக்கிற வகையிலாவது ஒவியர்களுக்கு. ஒரு நம்பிக்கை உண்டு. சபைகளிலும், வானெவிகளிலும் கிடைக்கிற வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு காலந்: தள்ளுகிற நம்பிக்கை சங்கீதத் துறையில் ஈடுபட்டிருக்கிறவர் களில் சிலருக்காவது உண்டு. கோவில் கட்டுவதிலும், சில கள் செதுக்குவதிலும் ஆகமங்களின் ஆழ்ந்த ஞானத்தோடு தேர்ந்துள்ளவர்களுக்கு இன்றைய நம்பிக்கையும் குறைவு. நாளைய நம்பிக்கையும் இல்லை. நீடித்து நிற்கக் கூடிய ஒரு கலையை ஆள்கிறவனின் சொந்த வாழ்க்கை இந்த நூற்ருண் டில் எவ்வளவுக்கு உறுதியில்லாமல் போய்விட்டது பார்த்தீர் களா? கூடை முடைகிறவனுக்கும், பாய் பின்னுகிறவனுக் கும் இருக்கிற நாளைய நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக அழியாமல் நிற்கிற படைப்பைச் செய்கிறவனுக்கு இல்லா மல் போய்விட்டதென்று தெரியும்போது நமக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது: . - கலைகள் நேற்றிருந்த நிலையிலிருந்து இன்று எப்படி எப் படியோ மாறி வளர்ந்து பிழைத்துக் கொள்ளுகின்றன. ஆனல் இந்த மாறுதலுக்கு ஏற்ப விரைந்து தங்களை மாற்றிக் கொள்ள முடியாத சில கலைஞர்கள் தளர்ந்து பின்தங்கி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/65&oldid=825975" இலிருந்து மீள்விக்கப்பட்டது