பக்கம்:சிந்தனை மேடை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ஒழுக்கமுள்ளவகை இருக்க வேண்டும். இனிப்புத் தின் பண்டங்கள் எல்லாவிற்றுக்கும் அவை எப்படி எப்படி எவ்வெவற்ருல் செய்யப்பட்டாலும் இனிப்பு என்பது பொதுக் குணமாவதைப் போல் கலைகளுக்கு ஒழுக்கம் பொதுக் குணமாக நின்று காக்க வேண்டும். எழுத்தும், இலக்கியப் படைப்பும் கூட இதற்கு விதி விலக்கு இல்ல்ை தான். - அறம் பிறழாத இலக்கியம் - ஒர் இலக்கிய ஆசிரியன் இறுதிவரை தன் எழுத்தின் இலட்சியங்களைக் காப்பாற்றிக் கொள்வது ஒரு பெண் தன் நிறைவைப் பாதுகாத்துக் கொள்வதைப் போல் அவசிய மானதும். தவிர்க்க முடியாததும் ஆகும். எழுத்துக்குப் பண்டமாகிற பொருளோ சம்பவமோ எதுவாக வேண்டு மாலுைம் இருக்கலாம். ஆனல் அதிலிருந்து விளைகிற சாரம் எந்த விதத்திலாவது சமுதாய நலனுக்குப்பயன் பட வேண்டும். அறம், அறமல்லாதது என்ற பிரிவுகளை இன்றைய நிலைக்கு ஏற்ப இப்படி வைத்துக் கொள்ள முடியும். சமுதாய நலனுக்குப் பயன்படுகிற இலக்கியம் எதுவோ அது அறம் பிறழாத இலக்கியம்; சமுதாய நல லுக்குப் பயன்படாத இலக்கியம் எதுவோ அது அறம் பிறழ்ந்த இலக்கியம் என்று புது விதமாகப் பார்ப்பதற்குப் பழகிக் கொண்டால் மிகவும் நன்ருயிருக்கும். - - - - கொலை கொள்ளைச் செய்திகள், பேதைத் தன்மையால் பெண்கள் வழி தவறுதல், இவைகளே வைத்துக் கதையும் இலக்கியமும் புனைகிறவர்கள் இன்று கூடுதலாயிருக்கிருர்கள்: கதைகள் புனைவதற்கு இவை சம்பவங்கள் ஆகமாட்டா என்றே, இப்படிப்பட்ட சம்பவங்கள் வாழ்க்கையில் இல்லை என்ருே கூற முன் வரவில்லை. கொலை கொள்ளைச் செய்தி களைப் புனைகிற கற்பனை அதைப் படித்து முடித்ததும் அவற் றின் மேலும் அவற்றைச் செய்கிறவர்கள் மேலும் வெறுப்பு உண்டாக்குகிற அளவுக்காவது சமுதாய நலனுக்குப் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/69&oldid=825983" இலிருந்து மீள்விக்கப்பட்டது