பக்கம்:சிந்தனை மேடை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட வேண்டும். பேதைத் தன்மையாலும், அனதரவான சூழ்நிலையாலும், வழி தவறுகிற பெண்களேப் பற்றி எழுதப் படுகிற புனை கதைகள் அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத் துக் கொள்ளும் துணிவைப் பெண்களுக்கு உண்டாக்குவன. வாயிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அந்தந்தக் கதை களில் அவற்றின் தவறுதல் நிகழ்ச்சிகளே கவர்ச்சிகளாக அமையுமானல் எழுதுகிறவர்களின் பணி சமுதாய நலன் என்கிற பொது அறத்தை ஏதோ ஒரு வகையில் ஏமாற்று கிற தென்றே வைத்துக் கொள்ள வேண்டும். செய்திப் பத்திரிகைகளை விரித்தால் வழி தவறிய நிகழ்ச்சிகளைப் பற்றிய பலவிதமான செய்திகள், வார, மாதப் பத்திரிகைகளை விரித்தால் வழி தவறிய மையக் கருத்துக்களையே தங்களுடைய கவர்ச்சிச் சாதனங்களாகக் கொண்டு பிறக்கும் கதைகள்,-இவற்றையெல்லாம் படித்து: விட்டுப் பேசுகிறவர்களின் பேச்சில் வழி தவறுதல்கள்என்று மொத்தமாகப் பார்க்கும்போது நல்லதை விளைவிப் பதற்காக விவரிக்கிற கெடுதல்களே நல்லதை விளைவிக்கத் தவறிக் கெடுதல்கள் என்ற அளவில் மட்டும் கவர்ச்சி நிறைந் தனவாய்த் தோன்றி விடுவது தெரிகிறது. எழுத்தின் இலட்சியம் பெண்ணின் நிறையுடைமையைப்போல் காக்கப் பட வேண்டியதென்று சொன்னேன். 'ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' என்று திருவள்ளுவர் பெருமைக்கும், பெருந்தன்மைக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிரு.ர். இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளனுக்கும் இது பொருந்தும். இரண்டு வினுக்கள் எதை எழுதுவது?-என்ற கேள்வியைவிட எதற்காக எழுதுவது?’ என்ற கேள்விதான் முக்கியமாக இருக்க வேண்டும். காளிதாஸனும், கம்பனும், இளங்கோவும் ஆயிரங்காலத்து வெள்ளத்தையும் நீந்திக் கொண்டு நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/70&oldid=825986" இலிருந்து மீள்விக்கப்பட்டது