பக்கம்:சிந்தனை மேடை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. வருகின்றன. வசதியும் நவீன நாகரிக அமைப்புக்களும் உள்ள ஒட்டலில் தங்க இடம் கிடைப்பது அரிதாயிருப்ப தைப் போலவே மருத்துவக் கல்லூரி, பொறியியற் கல்லூரி போன்றவற்றில் தங்கிப் படிக்க இடம் கிடைப்பதும் அரிதா யிருக்கிறது. மாணவ வாழ்க்கையின்போது அந்த வாழ்க்கை எதைக் கற்பதற்காக அர்ப்பணிக்கப்படுகிறதோ அதை அள்ளிப் பருகி விடுவது போன்ற தாகத்தோடு கற்க வேண்டு. மென்று கற்கும் இலட்சணத்தைப் பற்றிச் சொல்லியிருக் கிருர்கள். 'பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி’ என்று நன்னூல் ஆசிரியர் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டு மென்பதைப் பற்றி இலக்கணம் வகுக்கும்போது கூறுகிருர். பருகி. விடுவதைப் போன்ற தாகமும், தவிப்பும்’-இன்று மான வர்களைப் பொறுத்தவரை எந்தெந்தத் திசைகளிலோ மாறி யிருக்கிறதே தவிர் நிச்சயமாக ஒரே திசையில் இல்லை. ஆசிரிய வாழ்க்கை பெருமுனிவர்களின் புனிதமான இயக்க மாக இருந்த நிலையிலிருந்து, இன்று டிரெயினிங் முடிந்த வுடன் அடைகிற பதவியாக மாறிவிட்டாற்போல் மாணவ. வாழ்க்கையையும் இன்ன பயனை எதிர்பார்த்து இத்தனை காலம் படிப்பது என்பதுபோல் மாறிவிட்டது. டாக்ட ராகத் தொழில் புரிய வேண்டுமென்ருல் மருத்துவக் கல்லூரி யில் சேர வேண்டுமென்றும், என்ஜீனியராகத் தொழில் புரிய வேண்டுமென்ருல் தொழில் கல்லூரியில் சேரவேண்டு மென்றும் பிற்காலத்தில் எப்படி வாழ்ந்து பிழைக்க வேண்டுமோ அப்ப்டிக் கல்வியின் இலட்சியமும் மாறிப் போய்விட்ட நூற்ருண்டில் நாம் வாழ்கிருேம். பிழைப்பை யும் வாழ்க்கையையும் வளர்த்துக் காப்பாற்றுகிற கல்வியை நம்முடைய மாணவர்கள் படிக்கிருர்களே ஒழிய மனத்தை, யும் பண்பாடுகளையும் வளர்த்துப் போற்றுகிற கல்வியைத் தேடித் தவிப்பதில்லை இந்த நூற்ருண்டில் மாணவ வாழ்க் கையின் நோக்கம் வேறு. பழைய நூற்ருண்டுகளில் மாணவ. வாழ்க்கையின் நோக்கம் வேறு. இந்த அடிப்படை வேறு பாட்டை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/73&oldid=825992" இலிருந்து மீள்விக்கப்பட்டது