பக்கம்:சிந்தனை மேடை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*74 மாணவ வாழ்க்கை எப்படி அமைந்தால் இதன் எதிர்காலத் துக்கு நல்லதோ அப்படி அதை அமைத்து விடுவதற்குப் பொறுப்புள்ள பெரியவர்கள் முயலவேண்டும். இதன் நோக்கம், மாணவர்களைக் கட்டுப் பெட்டிகளாய் ஆக்க வேண்டும் என்பதாகாது. இன்று விடுதலை பெற்று நிற்கும் இந்த நாட்டை என்றும் நல்லபடி காப்பதற்குத் தக்க பாது காவலர்கள் வேண்டுமே என்பதுதான் இந்தக் கவலையின் அர்த்தம். மாணவ வாழ்க்கையின்போது பறவைகள்போல் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கலாம். ஆனல் எங்கே பறக்கிருேம், எதற்காகப் பறக்கிருேம் என்ற விவரம் ஒன்றுமே தெரியாமல் தறிகெட்டுப் பறக்கக் கூடாது. "இப்படித்தான் இருக்கிருேம்’ என்று கட்டுப்பாட்டைப் புரிந்து கொண்டு மகிழ்ந்திருப்பது சுதந்திரமே ஒழிய, "நாம் நமக்குத் தோன்றியபடி எப்படி வேண்டுமானுலும் இருக்க லாம்’ என்று தான்தோன்றித் தனமாக இருப்பது சுதந்திர மாகி விடாது. அப்படித் தான்தோன்றித்தனமாக வளர்ச்சி பெற்ற முழு மனிதர்களே இருக்கக் கூடாது என்ருல் மாணவர்கள் இருப்பது எந்த விதத்திலும் சாத்திய மற்றதுதானே? வருங்காலத்தில் ஒப்பற்ற நவபாரத சமுதாயம் உரு வாகி வலிமை பெற்று நிற்பதற்கு இன்றைய மாணவர்கள் தாம் காரணமாக வேண்டும். தாங்கள் அந்த நல்ல எதிர் காலத்துக்குக் காரணமாகப் போகிருேம் என்ற ஞாபகம் மாணவர்களுக்கு மறந்து விடாதபடி செய்து கொண்டிருக் கிற அளவாவது நாம் பொறுப்பை நினைவூட்ட வேண்டும். இதைவிட வெளிப்படையாக எதுவும் விட்டுச் சொல்ல வேண்டியதில்லை. இன்றைய மாணவர்களுக்குத்தான் குறிப் புணரும் திறமை மிகவும் அதிகமாயிற்றே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/76&oldid=825998" இலிருந்து மீள்விக்கப்பட்டது