பக்கம்:சிந்தனை மேடை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மகாகவி பாரதி பாடிய பாஞ்சாலி சபதத்திலோ கவியின் கவனமும், கருணையும், எல்லாமே பாஞ்சாலியின் மேல் மட்டும் செலுததப்பட்டிருப்பதைக் காணலாம். இதிகாச கதாபாத்திரங்களில் பாஞ்சாலியைப் போலவே மகாகவி பாரதியின் அதுதாபத்துக்குரிய மற்ருெரு பெண்ணும் உண்டு. அவள்தான் சகுந்தலே. 'ஆடை குலைவுற்று நிற்கிருள்;-அவள் ஆவென் றழுது துடிக்கிருள்-வெறும் மாடுநிகர்த்த துச்சாதனன்-அவள் மைக்குழல் பற்றி இழுக்கிருன்’ என்று பாஞ்சாலிக்காகக் குமுறும் இதே மகாகவி சகுந்தலேக் காகவும் குமுறியிருக்கிருர். ஆனல் அந்தக் குமுறல் இப்படி வெளிப்படையாக அமையவில்லை. மிகவும் அந்தரங்கமாக வும், நாகரிகமாகவும் அது வெளிப்பட்டிருக்கிறது என் பதனைச் சுட்டிக்காட்ட முடியும். ‘சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத் தட்டி விளையாடி-நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரதராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை' என்று பாடி வைத்திருக்கிற இடத்தில்தான் எத்தனை குறும்பு பாருங்கள். பரதன், துஷ்யந்தன், சகுந்தலை, இரு வருக்கும் பிறந்த குழந்தையேயானலும் அந்தப் பிள்ளை சிங்கத்தைத் தட்டி விளையாடக் காரணமான வலிமையும் வீரமும் சகுந்தலையிடமிருந்து மட்டுமே அதற்குக் கிடைத்து விட்டதாகச் சொல்கிறவனைப் போல் சகுந்தலே பெற்ற தோர் பிள்ளை' என்று கம்பீரமாக ஆரம்பித்த, கவிதைத் துணிவை இங்கு நாம் எந்த நல்ல சொற்களால் போற்றுவது? புதுமைப் பெண் இப்படி இந்தத் தேசத்தின் பழைய தலைமுறைப் பெண் களே வணங்கிக் கூப்பிய இதே கைகளில்தான் புதிய தல்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/78&oldid=826002" இலிருந்து மீள்விக்கப்பட்டது