பக்கம்:சிந்தனை மேடை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. முறைப் பெண்மையை வாழ்த்தும் புதுமைக்கவிதைகளும் உரு வாகிப் பிறந்தன என்பதை நாம் நினைவு கூர வேண்டும். 'பெண்மை’-என்ற பதத்திற்குக் கண்ணுக்குப் புலன. வதோர் அமைதித் தன்மை-என்று பழைய உரையாசிரியர் கள் விளக்கம் எழுதியிருக்கிருர்கள். ஆனல் மகாகவி பாரதி யின் இலட்சியப்படி புதுமைப் பெண் வீரமும், நிமிர்ந்த, நடையும், நிலத்தில் எவர்க்குமே அஞ்சாத ஞானச் செருக் கும் உடையவளாக இருக்க வேண்டும். - 'முறத்தினுல் புலியை ஒட்டும் மொய்வரைக் குறப் பெண் போலத் திறத்தினுல் எளியை ஆகிச் - செய்கையால் உயர்ந்து நின்ருய்' . என்று மகாகவி பாரதியே பாடியிருப்பதைப் போல் திறத். தினல் எளியவளாய் இருந்து செய்கையால் மேல் எல்லைக்கு, உயர்ந்து நிற்க வேண்டும் நவபாரதத்தின் இலட்சியப் பெண். - 'பெண்ணுகி வந்ததொரு மாயப் பிசாசம்’ என்றும் "நுண்ணறிவு உடைய நூலொடு பழகினும் பெண்ணறிவு என்பது பெரும் பேதைமைத்தே' என்றும் பாடி வைத்திருக். கிற இந்த நாட்டுப் ப்ழங் கவிகளின் புதிய பரம்பரையில் வந்த அதே மகாகவி பாரதிதான், - “பெண்ணுக்கு அறிவை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சிலமூடர்-நல்ல மாதர் அறிவைக் கெடுக்கின்றர்.' என்று பெண்ணறிவைக் குறை சொல்லும் பித்தர்களைச் சாடிக் கவி புனைந்தான். இந்தப் புதுயுகக் கவியின் முற். போக்கான நினைவுகளுக்கும் இந்த நாட்டின் பெண் குலம். எத்தனை நூற்ருண்டுகள் நன்றி சொல்லிக் கொண்டிருந்தா லும் ஏற்கும். சக்தி, பாரதராணி, பாரதத்தாய், என்று. தேசத்தையும், இலட்சியங்களேயும், சக ல த் ைத யு ம் பெண்ணுக வழிபட்ட அற்புதமான மகா கவிஞன் பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/79&oldid=826004" இலிருந்து மீள்விக்கப்பட்டது