பக்கம்:சிந்தனை மேடை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 'ஜாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்." என்று புண்ணிய பாவத்தையே சமூகத்திற்கு நன்மை தருகிற புதுக் கோணத்தில் திருப்பிப் பார்த்த சீர்திருத்த வீரன் பாரதி. மனித இனத்திலேயே சாதிப்பிரிவு பாவம் என்று கருதிய மறுமலர்ச்சிக் கவி, ஆண், பெண், என்ற சாதிப் பிரிவை அறிவின் மிகுதி குறைவுகளை வைத்து எடை போடு வான் என்று நாம் எதிர்பார்க்கலாமா? சீர்திருத்த நோக்கம் "பாஞ்சாலிசபதம்’ என்ற பழங்காப்பியக் கதையை எழு துகிறபோதே புதுமைப் ப்ெண்ணுக்குத் தேவை என்று தான் கருதுகிற உரிமைகளைப் பாரதியால் அங்கும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எதைப் பாடினலும், எங்கே பாடின லும், பெண்மை வாழ்க என்று கூத்திடும் ஞாபகம் இந்தக் கவியின் இதயத்திலே மறவாமல் நிறைந்திருக்கிறதென்று நாம் உணர முடிகிறது. திரெளபதி சடை நடுவில் அவமான முற்று நிற்பதைப் பாரத தேசம் சுதந்திரமின்றி நிற்கிற நிலை யாகக் கருதிக் கொதிக்கிருன் இந்த மகாகவி. "பெண்ணுெளி வாழ்த்திடுவார்-அந்தப் பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல் கண்ணபிரான் அருளால்,-தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய் வண்ணப்பொற் சேலைகளாம்...அவை, வளர்ந்தன, வளர்ந்தன. வளர்ந்தனவே!" என்று திரெளபதியின் துகில் அளவற்று முடிவற்று வளர்ந்து கொண்டே போவதைக் கூறவேண்டிய இடத்திலும் கூட ஞாபகமாகப் பெண்ணுெளி வாழ்த்திடும் பெருமக்கள் செல்வம் பெருகுதல் போல்’ என்று இந்தக் கவியினல் தன் இலட்சியக் கருத்தையே உவமையாகச் சொல்வதற்கு முடி கிறது. சுதந்திர இயக்கத்தையே, சுதந்திரதேவி வழிப் பாடாக மாற்றிப் பெண்மைக்கு மரியாதை செய்த கவி அயல்லவா நம் பாரதி? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/80&oldid=826008" இலிருந்து மீள்விக்கப்பட்டது