பக்கம்:சிந்தனை மேடை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஞர்களும் இயங்க வேண்டியிருக்கிறது. அதிகப் பணம் கொடுக்கிற-ஆளுல் உயர்ந்த கலை இலட்சிய மில்லாத ஒரு பெரிய பத்திரிகைக்கு எழுத முன் வருகிற ஒரு பெரிய எழுத் தாளன் அதிகப் பணம் கொடுக்க முடியாத- ஆனல் அதே சமயத்தில் உயர்ந்த இலக்கியக் கலை இலட்சியங்களைக் காப் பாற்றுகிற சிறந்த சிறு பத்திரிகைக்கு எழுத முன்வருவதற்கே தயங்குகிருன். எழுத்தின் இரண்டு துறைகளாகிய பத்திரிகைகள், பதிப்பகங்கள், ஆகியவற்றில் வியாபார அடிப்படையோடு: கூடிய தீவிரத் தொழில் மனப்பான்மைதான் இன்று இருந்து வருகிறது. பத்திரிகைகள், அல்லது பதிப்பகங்களைக் கலை மனப்பான்மையோடு நடத்துகிறவர்களை-அல்லது நடத்த முன் வருகிறவர்களை யாரும் ஊக்கப் படுத்துவதுமில்லை, உற். சாகப் படுத்துவதுமில்லை. தொடக்கத்தில் கலை மனப் பான்மையோடு எழுத்துத் துறையில் ஈடுபடுகிறவர்கள், கூட நாளடைவில் தொழில் மனப்பான்மை அடைவதிலிருந்து தப்ப முடியாமல் போகிறது.

  • எழுத்து கலேயாக இருக்க வேண்டுமா? இருக்கக் கூடாதா? அல்லது தொழிலாக இருக்க வேண்டுமா? தொழி லாக இருக்கக் கூடாதா? - என்பதன்று என் விவாதம்! நடை முறையில் இங்கு இன்று எப்படி இருக்கிறது என்பதை, வைத்தே நான் விவாதிக்கிறேன். -

"நமக்குத் தொழில் கவிதை -என்ற கவிதைத் தொட. ரில் பாரதி எந்த நல்ல பொருளில் தொழில்’ என்ற பதத் தைப் பிரயோகித்தானே அந்த நல்ல பொருளில் தொழில் என்ற பதத்தை இங்கு நான் பிரயோகிக்க வில்லை. அந்த நல்ல அர்த்தத்திலேயே தொழில் இங்கு இருக்குமானல் அப்புறம் இப்படி ஒரு விவாதமே அவசியமில்லை. அப்படி நல்ல அர்த்தத்தோடு கூடிய தொழிலே ஒரு கலையாகி விடு: கிறதுதான். இங்கேயோ தொழிலின் கலை மதிப்பே அது பெறுகிற இலக்கியத் தரத்தினால் கணிக்கப் படாமல் அது அடைவிக்கிற பணத்தினுல் கணிக்கப்படுகிறது; மதிக்கப்படு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/84&oldid=826015" இலிருந்து மீள்விக்கப்பட்டது