பக்கம்:சிந்தனை மேடை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. . . கிறது. பத்தாயிரம் பரிசு பெற்ற கதை-நூறு ருபாப் சன்மானம் பெற்ற சிறுகதை’-என்றெல்லாம் அல்லவா சராசரித் தமிழ் வாசகன் இலக்கியத்தைப் பற்றி பேசி மதிக் கிருன்! இலக்கியப் படைப்பைக் கலையாகக் கருதிச் செயல்: படும் முயற்சிகள் பெருந்தன்மையோடு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டப்பட்டுப் புகழுறும் நிகழ்ச்சிகள் இங்கு மிகவும் குறைவு. அரசியல் பொருளாதாரப் பிரச்னை களால் எதையும் அது பெறுகிற பணத்தை வைத்தே மதிக் கக் கற்றுக் கொடுத்திருக்கின்றன தமிழனுக்கு இந்தத் துறை யில் நம்மவர் மனப்பான்மை இன்னும் சிறு பின் ஆரத்தன. மாகவே இருக்கிறது. இந்த மனப்பான்மை மாறிய பிறகே இப்படிப்பட்ட விவாதங்களுக்குக் கூட ஒர் இலக்கிய அந்தஸ் துக் கிடைக்க முடியும். * , - ஒரு பத்திரிகையின் தொழில் ரீதியான வெற்றி - பல பத்திரிகைகளால் காப்பியடிக்கப் படும் ஆட்டுமந்தை மனப் பான்மையைக் கலை என்பதா? அசல் இலக்கியத்துக்காது. தவித்துப் போராடும் சிறிய இலட்சியப் பத்திரிகைகளையும் இலட்சிய எழுத்துக்களையும் பற்றி அறியாமலே-தங்கள் ஏ-பி.சி. சர்டிபிகேட்களில் புள்ளிவிவரம் நிறுவுவதைப் பற். றியே கவலைப்படும் பத்திரிகை அதிபர்களேக் கலைஞர்கள் என் பதா? அவற்றில் இயந்திர வேகத்தில் உழைப்பவர்களைக் கலைஞர்கள் என்பதா? அநுபவங்கள் நேர் மாத இருக்கும் போது கலே, தொழில் என்ற பதங்களே மட்டும் வைத்து நாம் எதை விவாதிக்க முடியும்? இந்தப் பதங்களுக்குரிய கமான அர்த்தத்தை முதலில் நாட்டில் தேடுவோம்? பின்பு விவா திப்போம் என்று நான் கூறினல் யாரும் கோபிக்கக் கூடாது. எந்த விவாதத்திலும் காரண காரிய அதுமானங்களை விடப் பிரத்யட்ச நிலைமைக்கு முக்கிய இடம் உண்டு. . .” மோசமான உடையை நெய்கிறவனுகுச் சமுதாயத்தில் மதிப்பு இருக்காது’-என்கிருர்கள் மோசமான ஆடையை, நெய்கிறவனுக்கும் இன்று தொழில் ரீதியில் மதிப்பு இருக கிறது. மதிப்பு இருக்கக் கூடாது என்று நாம் கருது ஒருேம். ஆனல் மோசமான ஆடை, மோசமான எழுத்து, மோக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/85&oldid=826017" இலிருந்து மீள்விக்கப்பட்டது