பக்கம்:சிந்தனை மேடை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. கங்களும் அத்துறையிற் செய்துவரும் பணி அளப்பரியது. இதே வளர்ச்சியும், கலைத்திறனும், சுவை விருப்பும், பழந்: தமிழ் நாட்டில் இருந்தன. நாடகம், இசை முதலிய நுண் கலைகளைப் பழந்தமிழர் போற்றிப் பேணிப் பாராட்டிப் பெரு விருப்போடு சுவைத்து வந்த காலம் ஒன்று இருந்தது. இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணியதாக ஆராய்ந்து, இவை குணம், இவை குற்றம், இவை இலக்க ணம், இவை வழு. என அக்கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது. அத கனத் துணைக் கொண்டு நோக்குங்கால் அவர்தம் உயர்ந்த பண்பாடும் வாழ்கையும், வாழ்க்கையைச் சூழ்ந்து நிற்கும் கலைகளை அடிப்படையாகக் கொண்டே கருக்கொள்ளத் தொடங்குகின்றன என்பது அறிஞர் துணிபு. பழந்தமிழர்கலை வாழ்க்கை இத்துணிபுடன் சற்றும் முரளுத ஒன்ருக அமைந் திருத்தலை வெளிப்படையாக அறியலாம். இசைக்கு இது இலக்கணம். இது குற்றம் என்ற வகுப்புண்மையைத் தமிழ் நூற்றுணை கொண்டு விளக்க முடியும். பதிைெரு வகைப் பாடல் நெறிகளைப் பழந்தமிழர் மேற் கொண்டுள்ளனர். ஒவ்வொரு நெறியும் அமைந்த முறை துறைகள் வேறுபாடு டையன. இசை மரபு என்னும் பழந்தமிழ் இசை நூலில் அப் பதிைெருவகைப் பாடல்களையும் கீழ்க்கண்டவாறு கூறுகிரு.ர். உள்ளாளம் விந்துவுட னதமொலி யுருட்டுத் - தள்ளாக துரக்கெடுத்தல் தான்படுத்தல்கருதி நலிதல் கம்பித்தல் குடிலம் (மெள்ளக் ஒருபதின்மேல் ஒன்றென் றுரை - (1) உள்ளாளம், (2) விந்து, (3) நாதம் (4) ஒலி, (5) உருட்டு, (6) தூக்கு, (7) எடுத்தல், (8) படுத்தல், (9) நலிதல், ( 10) கம்பித்தல், (11) குடிலம். - - - இப் பதினொரு வகைப் பாடல் நெறிகளிலும் உள்ளாளப் பாடல் நெறி தலை சிறந்தது. இசை பாடுவார்க்கு இன்ன வின்ன குற்றங்கள ஆகா என வரையறுத்துக் கூறும் இலக் கண அமைப்பை உடையது. உள்ளாளப் பாடல் நெறியின் சி. மே, 6. - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/87&oldid=826020" இலிருந்து மீள்விக்கப்பட்டது