பக்கம்:சிந்தனை மேடை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ருந்து நாமறியும் இசையியல்பு நுணுகியதொரு பேருண்மை யாக அமைகிறது. தற்கால இசைவாணர்களிற் பெரும்பா லோரிடத்தில் நாம் காணுகின்ற ஒரு பெரிய குறை என்ன வென்ருல், அங்க அசைவுகள்' என்றுதான் சொல்ல வேண் டும். உயர்ந்த இசையின்பத்திற்குரிய சுவை நுகர்ச்சியை இவ் வங்க அசைவுகள் ஓரளவு பாதிக்கத்தான் செய்கின்றன. பாடுகின்றவர் தரத்தில் உயர்ந்த இசையைத் தேளுக உருக்கி இழைத்துப் பாட்டாகப் பாடி, அவையில் உள்ளவர் களைக் கவர முயன்ருலும் அவரிடத்தில் உள்ள மிகச் சிறிய தவருகிய அங்க அசைவால் அக் கவர்ச்சி ஏற்படாமற் பாழ் பட்டு விடுகிறது. அங்க அசைவால் தோன்றுகின்ற சிறிய நகைச்சுவை பெரிய இசைச் சுவையைத் தலையெடாவண்ணம் கீழ்ப்படுத்தி விடுகிறது. இசைவாணரிடம் சுவைப்பவன் உண்மையான சுவையைக் காண வேண்டுமானுல் கடவுளி டம் அடியானுக்கு ஏற்படுகின்ற பாசம் அவனுக்கு இசை வல்லுநரிடம் ஏற்பட வேண்டும். சுவைப்பவன் இசைப் பவனுடைய அதிமனித ஆற்றலிற் கலந்துள்ள தெய்வத் தன் மையை உணர்ந்தாலொழிய உண்மையான இரசனை தோன்றுவதற்கு இடம் ஏற்படாது. யானறிந்த இசைவான ரொருவர் இங்கே எடுத்துக்காட்டாக அமையத் தக்கவர். பாட ஆரம்பித்தவுடன் குடுமி முடியவிழ்ந்துவிடும். கண்கள் காதுவரை வலித்துக் கொண்டு செல்லும். புருவம் நெற்றி யோடு போர் செய்யும். கழுத்து விம்மி விம்மி நெஞ்சுக்குழி தெரிவதும், புடைப்பதுமாக இருக்கும். இடை இடையே பலாச் சுளைப் பற்கள் ஒரு வெடிச் சிரிப்ப்ை ஒலியின்றி வெளிக் காட்டும். உடல் ஆடும் ஆட்டமோ சொல்ல வேண்டியதே இல்லை. ஆரோகண கதிகளை அவையினர்க்கு விளக்குவதாக எண்ணமோ, என்னவோ? ஒரு கை மேலே போகும், மற் ருெரு கை கீழே அங்கவஸ்திரத்தைத் திருகிக் கொண்டிருக் கும். முன்னே பருத்தெழுந்த தொந்தியின் அவஸ்தை வேறு. இப்படிப்பட்ட இலட்சணங்களுடன் அவர் பாடினுல் அந்த இசையின் தெய்வீகத் தன்மை என்ன ஆகும்? அது வெறும், இசையாக மட்டுமா இருக்கும்? நடனம், நடிப்பு, தேகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/88&oldid=826022" இலிருந்து மீள்விக்கப்பட்டது