பக்கம்:சிந்தனை மேடை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இசைத் துரண்களைச் செதுக்கும் சிற்பிகள் இன்று இல்லவே. இல்லை. கல்லில் உழைக்க விரும்பும் ஆற்றல் மிகுந்த தல்ை முறை மெல்ல மெல்லப் போய்க் கொண்டிருக்கிறது. போட்டோ எடுக்கத் தெரிந்த பின் சித்திரம், சிற்பம் எல் லாம் தளர்ந்துவிட்ட துறைகள் ஆகிவிட்டனவோ என்னவோ? - - அதே போல பஞ்ச லோகச் சிலை வார்ப்புச் (ஐம்பொன் கலவை) செய்யும் ஸ்தபதிகளும் அருகி வருகிருர்கள். புல்லாங்குழல், நாகசுரம், கோட்டு வாத்தியம், வீணை எல்லாவற்றிலும் ஒரோர் அரிய திறமை வாய்ந்த அணிதான் இன்னும் மீதமிருக்கிறது. நடனத்திலும் அந்த நிலைதான். சிறுபான்மை அணி ஒன்றே மீதமிருக்கிறது. ஒர் ஊரில் முன்பு இரண்டு பெட்ரோல் பங்க் இருந்தால்: இப்போது ஆறு இருக்கிறது. மூன்று தியேட்டர் இருந்தால் இப்போது ஒன்பது இருக்கிறது. ஒரு பள்ளிக்கூடம் இருந் தால் இரண்டு இருககிறது. அபூர்வமான துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டும் ஏனே இந்த விகிதாசாரத்தில் பெருகவில்லை. சுதந்திரத்திற்குப் பின் நாம் அடைந்த வளர்ச்சியில் எங்கோ எதிலோ கோளாறு இருக்க வேண்டும். நமது நாட்டின் தனித்திறமைகள், தொழில் நுணுக்கங்கள், மரபுகள், எவை எவையோ அவற்றை சார்ந்தவர்களின் வாரிசுகள் சுதந்திர இந்தியாவில் நலம் பெறவில்லை. எதளுல் என்பது ஆராய்ச்சிக்குரியது. - அறங்கள் - தர்ம. அதர்மங்களைப் பற்றிய நம்பிக்கையில் ஆழ்ந்த, வர்சள் கூட குறைந்து வருகிருர்கள். அறஞ் செய விரும்பு. ஆறுவது சினம், எனக் கற்றும் கற்பித்தும் நம்பிய தல்ை முறையிலிருந்து இன்றைய மக்கள் வெகுதுரம் விலகி வந்து விட்டவர்களைப் போல் தோன்றுகிருர்கள். உண்மையில் நம்பிக்கை இழந்துவிட்ட பத்து பேருக்கு நடுவில் சத்தியத் தைப் பற்றிப் பேசுகிறவன் மட்டும் பழைய தலைமுறையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/92&oldid=826032" இலிருந்து மீள்விக்கப்பட்டது