பக்கம்:சிந்தனை மேடை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9拉。 சேர்ந்தவளுகச் சுட்டிக் காட்டப்படுகிருன். பாவ புண்ணி யங்களின் நம்பிக்கை இழந்துவிட்ட பத்து பேருக்கு நடுவே அவற்றில் நம்பிக்கையுள்ள ஒருவன் இடையூருக தோன்று கிருன் மாறி வரும் கால நிலைகளைப் பார்க்கும்போது பேராசையும், பரபரப்பும் நிறைந்த சூழ்நிலைகளின் நடுவே நிதானமும், உண்மையும், திருப்தியும் இடையூறுகளாகவே தோன்றத் தொடங்கி விட்டன. தொந்திரவுகளாகவும். கருதி பலர் இவற்றை ஒதுக்கத் தொடங்கி விட்டனர். நிஜம் சொல்லி வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க முடியாதென்று தோன்றவே நிஜம் சொல்லி வியாபாரம் செய்யும் தலைமுறை மறையத் தொடங்கி விட்டது. நிஜம் சொல்லி எளிமையாகவும், சத்தியமாகவும் நடக் கும் நல்ல அரசியல்வாதிக்கு வெற்றி இல்லாமல் போகவே நிஜமும் எளிமையுமுள்ள அரசியல்வாதிகளின் தலைமுறை மறையத் தொடங்கி விட்டது. மெய்யான உண்ணுவிரதத்துக்கு மதிப்பில்லாமல் போகவே ப்லாத்கார வழிகள் வளரத் தொடங்கி அசல் உண்ணுவிரதிகளின் தலைமுறை மறையத் தொடங்கியிருக். கிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி ஒழுக்கமாகவும் அடக்கமாகவும், வாழும் மாணவன் முன்னுக்கு வரவும். திடீர் தலைவனுகவும் முடியவில்லை என்பதல்ை, அடக்க ஒடுக்கமும் நிறைந்த மாணவர் தலைமுறை மெல்ல மெல்ல (ஏன்? கொஞ்சம் வேகமாகவே) மறைந்து வருகிறது. அறம் தொடர்பால் மதிப்பீடுகளுக்கு (Values) மரியாதையே மெல்ல மெல்ல மறையத் தொடங்கியிருக்கிறது. எல்லாத் துறையிலும் பூஞ்சையான, சோனி தட்டிப்போன ஒரு ஹிப்பிகள் கூட்டம் மெதுவாக உருவாகி வருகிறது. நன்றி. யுடமை, விசுவாசம், நட்பு, பணிவு, எல்லாம் பழம் பண்டங் களாகக் கேலி செய்து ஒதுக்கப்படும் நிலைமையைக் காண் கிருேம். சத்தியமாக முன்னுக்கு வர உழைத்துத் தோற். பவன் கேலிக்கு ஆளாவதும், சாதுரியமாக முன்னுக்கு வரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/93&oldid=826034" இலிருந்து மீள்விக்கப்பட்டது