பக்கம்:சிந்தனை மேடை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 கிறவன் புகழ்ச்சிக்கும் செல்வாக்கிற்கும் ஆளாவது ட இன்றுள்ள மோசமான முன்னுதாரணங்கள். சாதுரியமான குறுக்குவழி வெற்றி பலரை கவர்வதும், நிதானமான அற வழி வெற்றி பலரைக் கவராததும்தான் இன்றைய நடை முறை. மொழியறிவுத் துறை மொழியில் பிழையாக எழுதுவதும், பிழையாகப் ப்ேசு வதும் கேவலமான குற்றங்கள் என்று நாணி-நடுங்கிய தலை முறை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் பிழையாக எழுதினாலும் புலமை உள்ளவர்கள் புகழும் ஒரு புதிய தலைமுறை மங்கலாக முன் ளுல் தெரிகிறது. அச்சுக் கோப்பவர்களும் சரி, பிழை திருத்துபவர்களும் சரி, சில பிழைகளை மன்னிக்கவும், பெரிது படுத்தாமல் விட்டு விடவும் பழகிக் கொண்டு விட்டனர். ஒற்றைச் சிறு பிழையும்கூட வராமல் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி முரண்டு பிடித்த (நல்ல முரண்டுதான்) பழைய தலைமுறை மறைந்து கொண்டு வருகிறது. பரி தாபமாக மறைந்து கொண்டு வருகிறது. செய்யுள், வசனம், எதிலும் பிழைகளைப் பொருட்படுத் தாமல் விடுவது பெருந்தன்மைக் குணமாக எதிர்பார்க்கப் படுகிறது. அதே சமயத்தில் சாதி, கட்சி, கொள்கை, அடிப்படையில் வேறுபடுகிறவர்களின் சின்னஞ்சிறு பிழை கள் கூடப் பெரிதுபடுத்திக் காட்டப்படுகின்றன. எதிர்த் துக் கட்சி கட்டப்படுகின்றன. இப்படி ஒரு வளரும் தலை முறை. அப்படி ஒரு மறையும் தலைமுறை. மார்ஜினல் மிஸ்டேக்ஸ்’ என்று ஓரளவு பிழைகளைக் கையாலாகாத் தனத்தோடு ஒப்புக் கொள்ளும் கோழைத் தனமானதொரு கூட்டம் எதிரே வந்து கொண்டிருக்கிறது. தவறுகள் குற்றங்கள் அல்ல’ என்று மன்னிப்புக் கோரும் இன்னெரு வகை கூட்டமும் வளர்ந்து வருகிறது. எழுத்துப் பிழைகளே தென்படாத பரம்பரையைச் சேர்ந்த பிடிவாதமான ஆங்கில நாளிதழ்கள் சிலவற்றில்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/94&oldid=826036" இலிருந்து மீள்விக்கப்பட்டது