பக்கம்:சிந்தனை மேடை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. இப்போதெல்லாம் வார்த்தைப்பிழைகளேதென்படுகின்றன. கொட்டை கொட்டையான வார்த்தைகளோடு கூடிய தலைப் புக்களில் பிழை தெரிகிறது. பிழைகளைக் காணச் சகியாத தலைமுறை மெல்ல மெல்ல மறைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறதோ? - பேச்சில் உச்சரிப்புக் குறைகளை சுலபமாக மன்னிக் கிருேம். ஏனெனில் உச்சரிப்பு எப்படி இருந்தாலும் அப்படி உச்சரிப்பவர்களின் தமிழ் பற்று அழுத்தமாக (அலுத்த மாக அல்ல) இருக்கிறதாம். மோசமான உச்சரிப்பை முதல் தர மான மொழிப்பற்றுக்காக மன்னித்தாக வேண்டும், இது வளரும் தலை முறை. அப்படி மன்னிக்காத முரண்டு மறை யும் தலைமுறை. உண்மையாயிருப்பது மறையும் தலைமுறை. உண்மையாயிருப்பது போல் நடிப்பது எதிரே வரும் தலை முறை என்று தெரிகிறது. * - பாட்டு, நடிப்பு, வசனம், எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவர்கள் நடித்த தலைமுறை மறைந்து விட்டது. வசனம் பேசுவது மட்டுமேகூட நடிப்பு என்ற புதுத்தலை முறை தெரி கிறது. சிரமங்களை எல்லாம் ஒரே ஒருவன் இரு தோள்களில் ஏற்ற தலைமுறை மறைந்து சிறு சிறு சிரமங்களினலேயே பெரும் பிரதாபங்கள் பெறும் தலைமுறை வளர்கிறது. பத்தி ரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழில் நுட்பத் துறையினர் எல்லாப் பிரிவிலும் பழைய திட சித்தமும், உழைக்கும் திறனும், நிதானமும், பிடிவாதமும் உள்ள ஒரு தலைமுறை மறைந்து அவை எல்லாம உள்ளதுபோல நடிக் கும் பலவீனமான ஒரு கூட்டம் நம்மைச் சுற்றி வளர்வதைப் பார்க்கிருேம். பக்கா'வாக உழைக்கும் அந்தப் பழைய தலைமுறை மறையக் கூடாதே. கடோத்கஜனையும், கிங்கரனே யும் போல் மனித சக்தி (Man Power) அதிகமுள்ள அந்தத் தலைமுறை போய்விடக் கூடாதே என்று நமக்குக் கவலையாக வும் பயமாகவும் இருக்கிறது. ஆளுல் நம் கண் காண அது மறைவது தெரியவும் செய்கிறது. வேருென்று வளர்வதும் தெரிகிறது. புதுமையை வெறுப்ப்தால்தான் இந்தக் கவலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/95&oldid=826038" இலிருந்து மீள்விக்கப்பட்டது