பக்கம்:சிந்தனை மேடை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

势链接 யும், பயமும் என்று நினைக்கக்கூடாது. புதுமையை நாம் ஆதரிக்கிருேம். ஆனல் அந்தப் புதுமை போலியாகவும், பழைய நல்முரண்டு அற்றதாகவும் மட்டுமே இருக்க வேண் டுமா? என்பதுதான் கேள்வி. இந்தக்கேள்வி அர்த்தமுள்ளது. மெல்ல மெல்ல மறையும் பிடிவாதமான பழைய தலை முறையின் கடைசி மனிதன்கூட வேகமாகவும், பரபரப்பாக வும் எழுந்து கால் தடுக்க முன்னல் ஒடி வருகிற இந்தச் சோனியான-உழைக்கும் சக்தியற்ற வளரும் தலைமுறையின் ஆயிரக்கணக்கான மனிதர்களை எத்தனையோ காரணங்களுக் காக நிறைய மன்னிக்க வேண்டியதாகத்தான் இருக்கும். நயம்பட உரை! பாரதியின் காலத்துக்குப் பின் படிப்படியாகத் தமிழில் ஒரு புதிய சக்தி பிறந்திருக்கிறது. வசன நடையின் எளிமை அமைந்த கவிதையும், கவிதை நடையின் மெருகும் நளின மும் வாய்ந்த வசனமும் பாரதி யுகத்தின் விளைவாக (impact) நமக்குக் கிடைத்திருக்கின்றன-என்பதை மேடைச் சொற். பொழிவுகளிலும், இலக்கிய விமரிசனக் கடடுரைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். நான். 'சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்று வேருெரு தொடர் பில் பாரதி பாடியதைத் தமிழ் நடையில் விளைந்துள்ள மாறு தலோடு இணைத்துப் பார்க்கிறேன் நான். இந்தத் தலை முறையில் எழுத்திலும், பேச்சிலுமாக தமிழில் ஒரு புதிய சக்தி அல்லது புதிய வேகம் பிறந்திருக்கிறது. நேர்படப் பேசு, நயம்பட உரை என்பவை பாரதியின் புதிய ஆத்திசூடி யில் இரண்டு தொடர்கள். *: சுற்றி வளைக்காமல் நேர்படப் பேசும் தமிழ் நடை. இன்று உருவாகியிருக்கிறது. நயம்பட உரைக்கும் தமிழ் நடையும் வளர்ந்திருக்கிறது. பழமையின் மந்த கதியை மாற்றுகிற சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. மந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/96&oldid=826040" இலிருந்து மீள்விக்கப்பட்டது