பக்கம்:சிந்தனை மேடை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. தீபம் ஏற்றினன் அல்லது தீபம்மை ஏற்றினன் தீபத்தை ஏற்றினன் கோபத்தால் வந்த வினை கோபம்மால் வந்த வினை இன்னும் சிலர் சொற் சிக்கனத்தைக் கடைப்பிடிப்ப தாகக் கூறிக் கொண்டு - பொருள் வேற்றுமை அல்லது அர்த்தபாவத்தைத் தெளிவாக உணர்த்தும் இடைச் சொற். களே நீக்கிவிட்டு எழுதுகின்றனர். அதலுைம் வாக்கியங்கள் குழப்பம் அடையும். சரியான பிரயோகம் தவருண பிரயோகம் செருப்பைக் கழற்றிவிட்டுச் செருப்பைக் கழற்றிச் சாப்பிடப் போனுன் சாப்பிடப் போன்ை போகும்போது சொல்லிக் போகும்போது சொல்விப் கொண்டு போளுன் போளுன் இவற்றில் செருப்பையே கழற்றிச் சாப்பிட்டது போல. வும், எதையோ சொல்லிவிட்டுப் போனதுபோலவும் (விடை. பெற்றுச் சென்றதைக் குறிக்காமல்) பொருட் குழப்பங்கள் நேர்ந்துள்ளன. இன்னும் சிலர் அறந்தாங்கி என்பது: அறந்தை என்றும், உறையூர் என்பது உறந்தை என்றும் மருவி வழங்குவதுபோல் மாயவரம்’ என்பதை மாயை' என்றும், பூவிருந்தவல்லி, பூங்குடி, பூவற்றகுடி, பூவூர் ஆகிய பல பெயர்களே ஒரு சீராகப் பூவை’ என்றும் வலிந்து முயன்று மருவச் செய்கிருர்கள். முன்னேர் வழங்கிவிட்ட மருவுதல் மொழிகளே அப்படியே அங்கீகரித்துக் கொள்வ. தற்கு இலக்கணம் அநுமதி அளித்திருக்கிறதே ஒழியப் புதி: தாகக் கிடைக்கும் ஒவ்வொரு பெயரையும் அப்படி ஆக்கச் சொல்லி எந்த இலக்கணமும் வேண்டியதாக எனக்குத் தெரிய: வில்லை. மாயை' என்ருல் மாயவரத்தை நினைப்பதா அல்லது மாயை' என்ற வேதாந்த மொழியை நினைப்பதா? "பாவூர்” என்பதைப் 'பாவை’ என்ருக்குவதும் இப்படித். தான். பொருட் குழப்பத்தையும், சொல் மயக்கத்தையும். பிறழ்ச்சியான பிரயோகத்தையும் கூடியவரை தவிர்க்க வேண்டும், தமிழ் மொழிக்கு நாம் செய்யும் தொண்டுகளில் அது தலே உது. . 责

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/98&oldid=826046" இலிருந்து மீள்விக்கப்பட்டது