பக்கம்:சிந்தனை வளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நா. பார்த்தசாரதி

எப்படி வியப்பது? அன்று, ஆட்சியில் தங்கம் விலை மலிவா யிருந்தது. இன்று ஏறி விட்டது.’’

தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதும் சர்வதேச மார்க்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு என்ன விலை. நிர்ணயிக்கிருர்கள் என்பதைப் பொறுத்தது. கத்திரிக்காய், வாழைக்காய்விலை போல் அது உள்ளுர்க் காரணங்களால் திடீரென்று ஏருது. சர்வதேச மார்க்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 450 டாலருக்குமேல் இருக்குமானல் இங்கே, எப்படிப்பட்ட கொம்பன் பிரதமராக இருந்தால் கூட அதை மலிவாக வைத்திருக்க முடியாது. ஏனென்ருல், தங்க விலை நிர்ணயத்துக்கு இங்கே ஆட்சியிலிருப்பவர்கள் நேரடியாகக் காரணமில்லை. விவரம் தெரிந்தவர்கள் இந்தப் பேச்சைப் பேசியவர் எந்த அளவுக்குப் பொருளாதாரத்தில் பூஜ்யம் என்பதை அறிவார்கள். ஆனல் விபரம் தெரியாத, பெரும்பாலான பாமர மக்கள். அந்த ஆட்சி போன தல்ை தான் தங்கம்.விலை ஏறிவிட்டது போலவும், மறுபடி அந்த ஆட்சிக்கு வந்தால் தங்கம் ஐந்து ரூபாய், பத்து ரூபாய். விலைக்குச் சவரன் சவரனகத் தெருவெல்லாம் கூறு கட்டி இறைக்கப்பட்டுக் கிடக்கும் என்பது போலவும் நினைக்க வழி வகுக்கும் சமூகப் பொறுப்பற்றது. இந்தப் பேச்சு-இந்த மாதிரிப் பொறுப்பில்லாத பேச்சுக்கும் சுயநலமே காரணம். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை எப்படி யாவது ஒட்டுப் போடுகிற சில நாட்களுக்குத் தப்பான பிரமையில் வைக்க வேண்டும் என்று முயலும் எந்தப் பிரசங் கியும், எந்த அரசியல் தலைவனும் சமூகப் பொறுப்பின்மை. யில் யாருக்கும் குறைந்து விடுவதில்லை. தனக்குச் சிரமம் வருகிறபோதும், தான் பாதிக்கப்படுகிறபோதும் சமூகப் பொறுப்போடு பிறர் நடந்து கொள்ளவில்லையே என்று வருத்தப்படுகிற ஒவ்வொரு தனி மனிதனும் தன்னல் பிறர் சிரமப்படும்போதும், தான் பிறரைப் பாதிக்கும்போதும். அப்படி வருத்தப்படாத நாடு இது.

முயன்று லஞ்சம் வாங்கிய ஒர் ஊழியன்மேல் போலீஸார் நடவடிக்கை எடுத்தால் அந்த ஊழியனுக்காக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/10&oldid=562252" இலிருந்து மீள்விக்கப்பட்டது