பக்கம்:சிந்தனை வளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 7. மலட்டுக் கலைகள்

சமீப காலமாக மக்களே மகிழ்வூட்டும் அல்லது, சமூகத்தைச் செம்மைப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் நமது கலைகள், இலக்கியம் முதலிய சாதனங் களில் ஒரு நுணுக்கமான கோளாறு தோன்றி இருப்பதைக் கவனிக்கலாம். நாளாக நாளாக இக்கோளாறு அதிகமாகி வருகிறது. குறி தவறுதல், இலக்கின்மை ஆகிய கோளாறு களைத்தான் சொல்கிறேன். பாவம் செய்பவன் சீரழிந்து போவான்’ என்பதை ஒரு கதை மூலமோ, நாடகம் மூலமோ சினிமா மூலமோ சித்திரித்து மக்களுக்குக் காட்ட முயன்ருல், 'பாவம் செய்பவன்-பாவம் செய்தல்-பாவம் செய்யலாம்’ என்பது வரைதான் மக்கள் மனத்தில் போய்ப் பதிகிறது. "சீரழிந்து போவான்’ என்ற மிக முக்கியமான-தவிர்க்க முடியாத பிற்பகுதி உண்மை யார் மனத்திலும் பதிய மறுக் கிறது. அல்லது, போய்ச் சேர்வதில்லை. இது இந்தக் காலத்தி லுள்ள கோளாரு அல்லது இக்காலக் கலைகளின் மலட்டுத் தனமா? .

பல ஆயிரம் ஆண்டுகளாக இராமாயணமும், பாரதமும் உண்டாக்கிய தார்மீக உணர்ச்சிகளில் அரைக்கால் பங்குகூட இன்று உண்டாகவில்லை. காரணம் என்னவாக இருக்க முடியும்? . -

'இராமனாகவும். தருமனுகவும் நடந்து கொள்ள வேண்டும். - இராவணனுகவும், சகுனியாகவும் நடந்து கொள்ளக் கூடாது’ என்று தலைமுறை தலைமுறையாக உண்டாகிவிட்ட சமுதாய நல்லெண்ணம்கூட இன்று மெல்ல மெல்ல மாறி வருகிறது. -

அதே இராமாயண-பாரத மையக் கருத்துள்ள இன்றைய கதைகளோ-இராமனக நடந்து கெர்ள்வது சிரமம். அதல்ை இராவணனகவே நடந்து கொள்வோம், தருமனக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/100&oldid=562342" இலிருந்து மீள்விக்கப்பட்டது