பக்கம்:சிந்தனை வளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 0 நா. பார்த்தசாரதி

தனமானது என்று சிலர் கூறலாம். ஆனால், இன்றுள்ள முறைகளை விட அதுவே எத்தனையோ மடங்கு தேவலே என்று. தோன்றுகிறது. அது ஸ்டிரெயிட்டாக இருப்பது அதன் குறையா என்ன?

இன்றைய கல்லூரிக் காதலைச் சித்திரிக்கும் ஒரு * இளமை + இனிமை + இன்பம் பாணி திரைப் படத்தில் கல்லூரி செல்லும் இளம் கதாநாயகியைக் கதாநாயகன் சக மாணவர்களுடன் சைக்கிளில் சென்று வழிமறித்துக் காதல் பாட்டுப் பாடுவதாக வருகிறது. கதை முடிவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் வரலாம்.

ஆனல், அசல் வாழ்வில் அதே காதல் பாடலை க் கல்லூரிக்குச் செல்லாத திருமணமான இளம் பெண் ஒருத்தி கறிகாய் கடைக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது, முச்சந்தியில் நிற்கிற சோம்பேறிகள் கண்ணடித்து ஜாடை செய்து அவளை நோக்கிப் பாடுகிருர்கள். இது நிஜ வாழ்வில் நடக்கிறது. ஒரு கலையின் அல்லது, கதையின் விளைவு நிஜ வாழ்வில் எவ்வளவு மோசமான பிரதிபலிப்புக்களையும், எதிர்" விளைவுகளையும் உண்டாக்குகிறது பார்த்தீர்களா?

மக்களுக்கு உருப்படியான பயன் தரத்தக்க எதையும் கருக் கொள்ளவோ, பிரசவிக்கவோ முடியாமல் வெறும் அரட்டைக்கும், மேலோட்டமான மகிழ்ச்சிக்கும் மட்டுமே இடமாக நிற்கும் மலட்டுக் கலைகளே இன்று வளர்கின் ற ை எழுத்து முதலிய பல கலைகளுக்கும் இது பொருந்தும்.

பத்திரிகைகளில் புதிய அலை என்ற பெயரில் வரும் பெரும்பாலான அரை வேக்காட்டுக் கதைகள் சமூகத் துக்கு. எந்தச் சிறிய பயனையும் தருவதில்லை. மாருக நேரெதிரான விளைவுகளைத் தரத் தவறுவதில்லை.

இன்றைய பல கதைகள், சினிமாக்கள், மேடை முதலிய வற்றின் மூலம்.அவைதங்கள் முடிவாய் மக்களுக்குமுழுதாகத்

தெரிவிப்பது எதுவுமில்லை. எல்லாமே பாதிக் கிணறு தாண் டும் வேலையாகத்தான் இருக்கின்றன. பாதிக் கிணறு தாண் டுவது பயனற்றது மட்டுமில்லை அபாயகரமானதுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/102&oldid=562344" இலிருந்து மீள்விக்கப்பட்டது