பக்கம்:சிந்தனை வளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 10 f

விபச்சாரம் செய்து குடும்பத்துக்குச் சம்பாதித்துப் போடும் ஒரு பெண்ணின் கதைக்கு அரங்கேங்றம்’ என்று பெயர் வைத்தாலும் வைத்தார்கள்; பல அலு வலகங்கள், பொது இடங்களில் வேலைக்குப் போகும் அழ கான இளம் பெண்களை வம்புக்கார ஆண்கள் சிலர், அதோ ஒரு அரங்கேற்றம் போகுது’- இது ஆபீஸ் மானேஜருக்கு அரங்கேற்றம்’ என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டதாகப் பல இடங்களில் காதில் விழுந்தது. அரங்கேற்றம்’ என்ற வார்த்தையே ஒரு மோசமான பதச் சேர்க்கை ஆகப் பயன் படுத்தப்பட்டு விட்டது. -

கதைகளில் வரும் படிப்பினேகள் மக்களிடம் அறவே போய்ச் சேராமல், அந்நிகழ்ச்சிக்கு முரண்பாடாகக் கதை யில் வரும் எதிர்மறை அம்சங்களே போய்ச் சேருகின்றன என்பது எவ்வளவு கேவலமான விளைவு?

செய்தி எதுவுமே கொண்டு வராதவனைச் செய்தி தரு பவன் என்பதுபோல், இலக்கு எதுவுமே இல்லாததைத்தான் இலக்கியம் என்று சொல்லிக்கொண்டிருக்கிருேமா நாம்? ஆட்களைக் கடத்தி, ஒளித்து வைத்துக்கொண்டு பணயத் தொகை கேட்கும் கிரைம் திரில்லர் வகையருச் செய்திகளை யும், படங்களையும், தழுவல் கதைகளையும் படித்துப் படித்து, அவ்வாறு செய்வது குற்றம் என்று உணர்வதற்குப் பதில் வேலையில்லாத படித்த இளைஞர்களில் சிலர் நம் நாட் டிலும் அப்படி மிரட்டல்களையே செய்யத் தொடங்கிவிட் டார்கள் என்பதை அறியும்போது என்ன உணர்கிருேம்? அதிக தூரம் போவானேன்? நம் சென்னையிலேயே பள்ளிக் குப் போகும் சிறுவனக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு, இரவுபத்து மணிக்கு மவுண்ட்ரோடுபோஸ்டாபீஸ் முகப்பி லுள்ள பப்ளிக் டெலிஃபோன் பூத் அருகே இத்தனை ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் வருக! போலீஸில் புகார் செய்ய முயன்ருல் பையனை உயிரோடு பார்க்க முடியாது’ என்று பெற்ருேரை மிரட்டிய சம்பவம் இங்கே போன வருஷம் நடக்கவில்லையா?

சி.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/103&oldid=562345" இலிருந்து மீள்விக்கப்பட்டது