பக்கம்:சிந்தனை வளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 103

பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் எழுதிப் பட்டினத்துக்கு வந்து பெரிய நூல் ஆசிரியகை மாறி கார், பங்களா எல்லாம் வாங்கிவிடுவதாக வருகிறது. நமது கதைகளில் சித்திரிக்கப் படும் ஏழைமையும் நம்பும்படியானதாக இல்லை. திடீர் வளர்ச்சியும், பணவரவும்கூட நம்பும்படியானதாக இல்லை. மிகைப்படுத்தப்பட்ட வறுமை, மிகைப்படுத்தப்பட்ட வளம் இரண்டுமே நமது கலைகளின் புதிய சாபக்கேடுகள். மிகைப்படுத்தப்பட்ட வறுமையைச் சிலபேர் ரியலிலம்’ என்று கொண்டாடத் தயாராக இருக்கிரு.ர்கள். வறுமையே ஆனலும் யதார்த்தமில்லாத, நம்ப முடியாத வறுமைச் சித்திரிப்பும் ஒரு மோசடியே. அதேபோல நம்பமுடியாத செல்வச் செழிப்பைச் சித்திரிப்பதும் அதிகமாக இருக்கிறது . இளைஞர்கள் சொப்பன லோகக் கனவுகளில் சஞ்சரிக்க ஒரு போதை மருந்துபோல இது பயன்படுகிறது.

ஒரு படத்தில் பத்து வீன்களில் சவிஸ்தாரமாக ஒருவன் மது அருந்துவதைக் காட்டிவிட்டுப் படம் முடியும்போது ஒரே ஒரு காட்சியில் ஒரு டாக்டர் வந்து வீவர் கெட்டுவிடும் ஜாக்கிரதை' என லேசாக எச்சரிப்பதுபோல் காட்டினல் இன்று 10 எமீன்களில் பார்த்த எப்படிக் குடிப்பது என்பது மட்டுமே படம் பார்ப்பவர்களின் மனத்தில் நிற்கிறது. கடைசி வீனில் டாக்டர் கூறும் ஒரு வாக்கியம் நிற்பதில்லை. 'மெஸேஜ் இல்லாத கதை, மெஸேஜ் இல்லாத நாடகம், மெஸேஜ் இல்லாத திரைப் படம், மெஸேஜ் இல்லாத காட் அடுக் கூப்பாட்டு சங்கீதம் என்று நம்முடைய கலைகளில் வரவர ஒரு மலட்டுத் தன்மை பெருகி வருகிறது.

தீய உணர்வுகளையே கிளறிவிடும் கலைகளால் ஒரு தலைமுறையே பாழாகிவிடுமோ என்று அஞ்ச வேண்டியிருக் கிறது. அச்சம் இயலாமையால் அல்ல; கவலையால்தான்.

எதிலும் குறி தவறுதல், இலக்கின்மை ஆகிய இரண்டும் தான் கலைகள் மலடு தட்டுவதற்கு முக்கியமான காரணம். குறி வைத்து எய்தால்தான் நாம் செலுத்துவது எதுவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/105&oldid=562347" இலிருந்து மீள்விக்கப்பட்டது