பக்கம்:சிந்தனை வளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 9

அவனது சக ஊழியர்களின் அனுதாப வேலை நிறுத்தமே 'பரிசாகக் கிடைக்கும் என்றிருக்கும் நாட்டில் சமூகப் பொறுப்பை எப்படி உணர்த்த முடியும். -

காய்கறி விலை ஏறுகிறதே?’ என்று மேடையிலே முதலைக் கண்ணிர் வடிக்கும் அதே அரசியல்வாதி, தான் சார்ந்திருக்கும் கட்சி மூலமோ அக்கட்சியின் மன்றத்தின் மூலமோ-போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்ப தாகச் சொல்லி-ஒவ்வொரு நடைபாதைக் காய்கறிக் கடைக்காரனிடமும் தினசரி மாமூலை வற்புறுத்தி வசூலிக்கும் தானும் அதற்கு ஒரு காரணம் என்பதை எண்ணிப் பார்ப் பதே இல்லை. யாருக்கும் சொந்தமில்லாத இடத்துக்குத் தானே பாதுகாவலனுகி வாடகை வசூலிக்கும் ஆட்கள் இங்கே ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிருர்கள். - தேர்தல்கள் வரும்போதெல்லாம் யாரிடமாவது பெருந் தொகை நிதி வசூல் செய்துகொண்டு, அவர்களது பண்டங் களைக் (சிமெண்ட், சர்க்கரை, காகிதம் போன்றவை) கிடைக்க விடாமல் - அல்லது எட்டாத உயரத்துக்கு விலையை ஏற்றிக் கிடைக்கச் செய்கிற சமூகப் பொறுப்பற்ற வர்கள் நிறைந்த நாடு இது.

பிரிட்டனைப் போன்ற கனிந்த ஜனநாயக நாடுகளில் தொழிற் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், கன்ஸர்வேடிவ் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் மக்களுக்கு அடிப்படையான சிரமங்கள் எதுவும் இராது. இரண்டு கட்சியிலும், கட்சிகள் என்ற அளவில் வேறுபாடு இருந்தாலும் மக்கள் நலனைப் பேணுதல்’ என்ற பொது நோக்கத்தில் வேறுபாடு இராது. "இந்த மக்கள் நலனைப் பேணுவது' என்ற அடிப்படை நோக்கத்தைத்தான் சமூகப் பொறுப்பு என்று இக்கட்டுரை எங்கும் குறிப்பிடுகிறேன். அதன் பொருளும் இங்கே இது தான். - - -

வாங்கிச் சென்ற ரொட்டியில் பூஞ்சைக் காள்ான்’ பூத்திருப்பதாகத் திருப்பிக் கொண்டு போய்க் காட்டினல், கடைக்காரர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பணத்தைக் கஸ்டமரிடம் திருப்பிக் கொடுக்கும் நாட்டில் உள்ள சமூகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/11&oldid=562253" இலிருந்து மீள்விக்கப்பட்டது