பக்கம்:சிந்தனை வளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 109

மேய்க்கவும், ஆட்டிப் படைக்கவும் முடிந்த பெரிய பதவி urror U. G. C. (University Grants Commission) சேர்மஞ்கத் தாம் வர வாய்ப்பு இருந்தது போல் அவருக்கே தோன்றியது. அவருடைய வி. ஸி. பதவி முடிய இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருந்தன. அப்போது அவருக்கு வேண்டியவர் ஒருவர், நீங்க யூ ஜி. ஸி. சேர்மனுக வருவது சுலபம்தான். ஆனால், ஒரே ஒரு குறையைச் சுட்டிக் காட்டி உங்களைச் சேர்மன் ஆக முடியாமல் பண்ணிலுைம் பண்ணி விடுவார்கள். நீங்க வெறும் எம். ஏ. தான். உங்களுக்கு பி. எச். டி. இல்லை’ என்று ஆதங்கப்பட்டுச் சொன்னர். அவ்வளவுதான், மேற்படி துணைவேந்தர் தாம் வி. வி-யாக இருந்த அதே சர்வகலாசாலையில், தாம் ஒய்வு பெற மீதமிருந்த இரண்டே இரண்டு மாதங்களுக்குள் பி. எச். டி. பெற்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பது என்று தீவிர மாகச் செயலில் இறங்கினர். - -

அவசர அவசரமாக உடனே அவர் வி. வி. யாக வேலை பார்க்கும் அதே சர்வகலாசாலை சிண்டிகேட்டுக்குத் தம்மை பி. எச். டி. க்கு ரிஜிஸ்டர் செய்து கொள்ளுமாறு அப்ளி கேஷன் போட்டார். சிண்டிகேட்டின் அடுத்த கூட்டத்தின் அஜெண்டா வில் பி. எச். டி. ரிஜிஸ்ட்ரேஷன் அயிட்டம் வரும்போது மட்டும் (எல்லா ஏற்பாடுகளையும் தமக்குச் சாதகமாகச் செய்து விட்ட பின்) ஒரு நிமிஷம் வெளியே வராண்டாவில் போய் நின்று கொண்டு, மற்றவர்கள் தம் அப்ளிகேஷனை ஒருமணமாக ஏற்கச் செய்த பின், மறுபடி உள்ளே வந்தமர்ந்தார்.

பதிவு செய்யும் பி. எச். டி. க்கு யாராவது ஒரு பேராசிரியர் (ஏற்கெனவே பி. எச். டி. பெற்றவர்) வழி காட்டி ஆக (Research guide) இருக்கவேண்டும் மற்ற .பி. எச். டி. க்கள் எல்லாம் தமக்குக் கீழே (Subordinates) பணி புரிபவர்களாக இருந்ததல்ை அவர்களில் யாரையும்வழி காட்டியாகக் கொள்ள வி.வி.க்கு விருப்பமில்லை. அதனல், உடனே தமது மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு அவசர அவசரமாகக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/111&oldid=562353" இலிருந்து மீள்விக்கப்பட்டது