பக்கம்:சிந்தனை வளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் Í I Í..."

பி. எச். டி. ரிஜிஸ்திரேஷனுக்காக யூனிவர்விடியில் நேரடி யாகக் கட்டி ரசீது வாங்க முடிந்த தொகையைத் தவிர...' ஆராய்ச்சிக்குரிய துறைகளின் தலைவர்களுக்கு வேறு ரேட்"

தனியாக இருக்கிறதாம். குருதட்சினை’ போய்ச் சேர்ந்தா

லொழியக் காரியம் நடக்காதாம். உற்றுழி உதவியும் உறு. பொருள் கொடுத்தும் கற்றல் நன்றே" என்ற கூற்றை மெய்ப்பிக்கிரு.ர்களாம். உறு பொருளாவது பெருந்: தொகை. -

'மூன்று ரெஃபரிகளையும் நானே கவனித்துக் கொள் கிறேன். ஐயாயிரம் ரூபாய் ரொக்கத்தோடு வா. பி. எச், . டி. நிச்சயம்’ என்று தெளிவாக வழிகாட்டும் Guide'கள் இருப்பதாகச் சொல்கிருர்கள், சில சமயம் ரேட் ஆருயிரம், ஒன்பதாயிரம் வரை கூட ஏறிவிடுகிறதாம். நாளைய நிலவரம் இன்னும் மேலே போகலாம் என்கிருர்கள்.

சில பல்கலைக் கழகங்களில் விடைத்தாள்களில் (answer sheets)எவ்வளவு பக்கம் எவ்வளவு அடிஷனல் வீட்ஸ் என்று, பரீட்சை எழுதியவர் எழுதிய பின் மொத்தப் பக்க எண்ணிக் கையைக்குறிப்பிட மறந்து விட்டால் அப்படி ஒன்றும் குறிப் பிடாத மாணவர்களின் அடிஷனல் வீட்ஸ்ை, விடை அளவோடு முடிகிற ஒரு பக்கத்துக்கு மேல் மொத்தமாக. அப்படியே கிழித்தெறிந்து விடுகிற ஸாடிஸ்ட்”-கள் கூட (Sadists) உண்டாம். பல யூனிவர்ஸிடிகளில் இது நடக்கிற: தென்கிரு.ர்கள்.

சில சமயம் ஆராய்ச்சி செய்பவர்கள் பெண்களாக இருந்தால்-மாலை 6 மணிக்கு இரவு ஏழு மணிக்கு-என்று நேரங்கெட்ட நேரத்தில், யூனிவர்விடி அறைகள் மற்ற ஊழியர்கள் எல்லாம் வெளியேறித் தனியாக, (ஹோ என்றிருக்கும்) வேளை கெட்ட வேளையில் தம் அறைக்கு, வந்து விவரங்களைக் கேட்டுக் கொள்ளச் சொல்லும் கய்டு கள்’ கூட உண்டாம். இதற்குப் பயந்தே சிலர் தங்கள் குழந்தைகளை, நீ பி. எச். டி. பண்ணியது போதும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/113&oldid=562355" இலிருந்து மீள்விக்கப்பட்டது