பக்கம்:சிந்தனை வளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கள்ள மார்க்கெட்டில்

- கல்வி

இந்தியாவின் முழுப் பெரிய நகரங்களிலும், முக்கால் பெரிய நகரங்களிலும், பாதி நகரங்களிலும் மிகவும் புதிய புதியகள்ள மார்க்கெட் வியாபாரம் ஒன்று ஆரம்பமாகி இருக்கிறது. நகரமா, கிராமமா என்று இன்னும் தீர்மானிக்க முடியாதபடி இரண்டுங்கெட்டானக இருக்கும் சில ஊர் களுக்கும்கூட இந்தக் கறுப்புச் சந்தைக் கல்வி வியாபாரம் பரவி வருகிறது. எல்லா ஊர்களிலுமே, ஆங்கில மீடியம்’ என்ற கவர்ச்சியில் இந்தக் கள்ள மார்க்கெட் கல்வி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சட்டமோ, அரசாங்கமோ இதை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நர்ஸ்ரி பள்ளிகள், இங்கிலீஷ் மீடியம் பள்ளிகள் என்கிற பெயரில் தனிப்பட்டவர்களால் குழந்தைகளுக்கு நடத்தப் படும் பள்ளிக்கூடங்களைத்தான் சொல்கிறேன். இந்த மாதிரிப் பள்ளிக்கூடங்களில் இரண்டு வகையான ஏமாற்றங் கள் நிச்சயமாகக் கண்ணில் படுகின்றன.

1. படிக்கிற குழந்தைகளின் பெற்ருேர்களிடமிருந்து அதிக பட்சமாகச் சம்பளம், கட்டணம் தவிர பல வகை களிலும் பணத்தைக் கறப்பது.

2. வேலை பார்க்கிற ஆசிரியர்களுக்குச் சம்பளம் என்ற பெயரில் எவ்வளவு குறைவாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவாகக் கொடுப்பது. குறைந்த சம்பளத் தைக் கொடுத்து விட்டு அதிகத் தொகைக்குக் கையெழுத்து வாங்கிக் கொள்வது. யாராவது எதிர்த்தால், அப்படி எதிர்ப்பவர்களை உடனே சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப் புவது. இதில் தர்மம், நியாயம், தாட்சண்யம் எதுவும் இல்லை. - -

வேறு வகை பிளாக் மார்க்கெட் வியாபாரங்களை விடக் குறைந்த முதலீட்டுடன் அதிக லாபம் சம்பாதிக்க முடிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/116&oldid=562358" இலிருந்து மீள்விக்கப்பட்டது