பக்கம்:சிந்தனை வளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 & சிந்தனை வளம்

மம்மி, டாடி என்று மாற்றிக் கூப்பிடுவதிலேயே சில பெற். ருேர்களுக்கு அல்ப சந்தோஷம் ஏற்பட்டு விடுகிறது! மம்மி, டாடிக்குமேல் பொதுவாக, இம்மாதிரிப் பள்ளிகளில் எதிர் பார்க்கும் அறிவு வளர்ச்சி, இனிய பழகும் முறைகள் இவற்றில் எதுவுமே தங்கள் குழந்தைகளுக்கு வராததைக் கண்டு நாளடைவில் பல பெற்ருேர்கள் பெருத்த ஏமாற்ற மடைகின்றனர்.

இவ்வாறு பெற்ருேர்களின் ஏமாற்றம் வளர்ந்து கொண் டிருக்கிற சமயத்திலேயே கல்வி வர்த்தகத்தைத் தொடங்கி யவர், அந்த வட்டாரத்தில் இரண்டு, மூன்று வீடுகள் தமது வியாபார ஸ்தலமான பள்ளிக்கூடத்துக்குச் சொந்த த் கட்டிடம், இரண்டு வேன், ஒரு கார் எல்லாம் வாங்கி விட முடிகிறது.

முதலில் தொடங்கும்போது ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பேசிக் கொண்டு, எவர் பிரைட் நர்ஸ்ரி ஸ்கூல்’ என்ருே, ப்ளு ஸ்கை சில்ரன் ஹவுஸ்' என்ருே போர்டு மாட்டுகிரு.ர்கள். இங்கிலீஷ் மீடியம் நர்ஸ்ரி, எல். கே. ஜி. யூ. கே. ஜி. வகுப்புக்கள்’ என்று விளம்பரம் செய்கிருர்கள், காம்பவுண்டில் இரண்டு மூன்று கூரை ஷெட்டும் போட்டுக் கொள்கிருர்கள். .

கிடைக்கிற ஐம்பது, அறுபது குழந்தைகளையும், அந்த வீட்டிற்குள் பட்டி தொட்டிகளில் மாடு அடைக்கும் பவுண் டில் அடைக்கிற மாதிரி அடைத்துப் போடுகிருர்கள், நர்ஸ்ரி, எல். கே ஜி. , யூ, கே. ஜி. மூன்றையும் ஒரே கூடத்தில் மூன்று மூங்கில் தட்டிகளை வைத்து மூன்று தனி: வகுப்புகளாகப் பிரித்து விடுகிருர்கள்.

அட்மிஷனின்போதே ரசீது தராமலும், தந்தும் அட்மிஷன் ஃபீஸ், ஹெல்த், ஸ்போர்ட்ஸ் என்று என்னென் னமோ பில் போட்டுக் கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்குக் குறையாமல் வாங்கிக் கொண்டு பின் ஸ்கூல் பில்டிங் டொனேஷன் (அநேகமாகக் கம்பல்ஸ்ரி) என்று ரூ. 50 அல்லது இருநூறு என்று தனியாகவும் வசூலித்து விடுகிருர் கள். தொடக்கமே இருநூறு, முன்னூறு ரூபாயோடு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/118&oldid=562360" இலிருந்து மீள்விக்கப்பட்டது