பக்கம்:சிந்தனை வளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் f 17

தொடங்கும். மாதச் சம்பளம் ரூ. 20 முதல் 30 அல்லது 40 வரை இருக்கும். முதல் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் வரும் போதே, ! உங்கள் குழந்தை ரொம்ப வீக். இங்கேயே ஸ்கூல் முடிந்ததும் மாலே 4 மணிக்கு மேல் அதிகப்படியாக ஒரு மணி நேரம் ஸ்பெஷல் கோச்சிங் செய்கிருேம். அதற்கு டியூஷன் ஃபீஸ், சம்பளம் தவிரத் தனியாக இன்னொரு 30 ரூபாய் ஆகும்-என்று எழுதி அனுப்புவார்கள். இந்த அதிகப் படி 30 ரூபாய்க்கு ஒரு தனி ட்யூஷன் இராது.

அவர்களே ஸ்கூல் பஸ் வைத்திருப்பார்கள், சிலர் ரிக்ஷா, முதலிய வேறு வித வாகனங்களைக்கூட உபதொழி லாக ஸ்கூலுடன் சேர்த்தே வைத்திருக்கிரு.ர்கள். அதில் உங்கள் பையனை அழைத்துச்சென்று திரும்பக்கொண்டுவந்து விடுவதற்கு மேலும் ஒரு 30 ரூபாய் அல்லது 40 ரூபாய் கேட்பார்கள். அது சைட் பிஸினஸ் அல்லது பை-புரா டெக்ட் விற்பனையாக இருக்கும்.

நடு நடுவே ஸ்கூல் வளர்ச்சி நிதிக்கு நாடகம், நட்சத்திர இரவு, இசை நிகழ்ச்சி என்று 15 முதல் 50 ரூபாய் வரை பெறுமானமுள்ள இரண்டு டிக்கெட்டுகளேயாவது நீங்கள் கண்டிப்பாக வாங்கியாக வேண்டும். ஸ்கூலில் டெலிவிஷன் வாங்குவதால், உங்கள் குழந்தை வழியாக வரிவிதிப்பு ரூ. 10 அல்லது 20 வரை தர வேண்டியிருக்கும். ஸ்கூலில் ரேடியோ வாங்கவும் முன்பு இதே மாதிரிப் பணம் தந்திருப் பார்கள். ஆனால், ரேடியோ, டி. வி. எல்லாம் ஸ்கூல் நடத் துகிறவருடைய வீட்டில் இருக்கும். பள்ளி நேரத்தில் டெலி விஷன் நிகழ்ச்சியைக் காட்டிக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர மருந்துக்குக்கூட டி.வி-யில் புரோகிராம் கிடையாது. இருந்தும் டி. வி. குழந்தைகள் செலவில்தான் வாங்கப்படு கிறது.

'இது தவிர யூனிஃபார்ம் துணி, இன்ன கலரில் பூட்ஸ்கள், நோட்டுப் புஸ்தகங்கள் எல்லாம் கண்டிப்பாக இந்தக் கடையில்தான் வாங்கியாக வேண்டும் என்று உங்கள் குழந் தைகளிடமே விலாசங்களைக் குறித்துக் கொடுத்து அனுப்பு வார் ಸ್ತ್ರೀ: தர்ஸ்ரி பள்ளியின் ஏகபோக முதலாளி. - ..— 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/119&oldid=562361" இலிருந்து மீள்விக்கப்பட்டது