பக்கம்:சிந்தனை வளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () நா. பார்த்தசாரதி

பொறுப்பு உணர்ச்சியையும், ஏமாந்தவன் தலையில் எதை யாவது நல்ல விலைக்குக் கட்டி அனுப்புவதுதான் வர்த்தகம்’ என்று மட்டுமே, வியாபாரத்தைக் குறுக்கு வழியில் புரிந்து கொண்டிருக்கும் நாட்டின் சமூகப் பொறுப்பு உணர்ச்சி யின்மையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புரியும்.

'நமக்கு லாபம் ஆனல் பிறருக்கு நஷ்டமானுலும் அது பரவாயில்லை’ என்று நினைக்கிற அரசியல் தலைவன், வர்த்தகன், சர்க்கார் ஊழியன், குமாஸ்தா எல்லாருமே. சமூகப் பொறுப்பின் அரிச்சுவடிகூடப் புரியாதவர்கள்: புரிந்து கொள்ளவும் விரும்பாதவர்கள்.

நமக்கு நியாயமான லாபம், பிறருக்கும் அதற்கு ஈடான பண்டத்தை விற்றிருக்கிருேம்’ என்று நினைப்பவர்கள் சமூக வாழ்வின் எல்லாத் துறைகளிலும் குறைவாயிருக்கிற தேசத் தில் பொறுப்பு உணர்ச்சியும் குறைவாகத்தான் இருக்கும்; இருக்கிறது. எத்தனையோ பேர் அரண்மனை வாசல் பக்கம் வைத்திருக்கிற அண்டாவில் பால் பாலாக ஊற்றப் போகிரு.ர்கள். நாம் ஒருத்தர் மட்டும் தண்ணிரை ஊற்றி ல்ை யாருக்குத் தெரியப் போகிறது’ என்று, அத்தனை பேருமே தனித் தனியாக நினைத்துத் தண்ணிரை மட்டுமே ஊற்றிற்ை போலத்தான் நமது தேசிய சமூகப் பொறுப்பு உணர்ச்சியும் இருக்கிறது! - -

தனித் தனியே பொறுப்பில்லாமல் இருப்பது, குழுக்கள் குழுக்களாகப் பொறுப்பில்லாமல் இருப்பது என்று இதில் பல பிரிவுகள் இருக்கின்றன. பொறுப்பில்லாமல் இருப்பதன் விடலைத்தனமான சுகத்தை அதிக காலம் இந்நாட்டில் அனுபவித்து விட்டோம். இன்னும் அந்தச் சுகத்தை விட மனம் வரவில்லை. மாணவப் பருவம் முடிந்து உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய வயது வந்தும் அதைக் கண்டு கொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாகவே விசிலடித்த படி நிற்கும் ஓர் இளைஞனைப் போல், எல்லா மக்களுமே. இருந்தால் அந்தத் தேசம் என்ன ஆவது? அதன் எதிர்காலம் தான் என்ன ஆவது? - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/12&oldid=562254" இலிருந்து மீள்விக்கப்பட்டது