பக்கம்:சிந்தனை வளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? I & சிந்தனை வளம்

பள்ளிக்குரிய அதே கலர் யூனிஃபார்ம் துணி, அதே கவர் ஷ வேறு கடைகளில் மலிவாகக் கிடைக்குமென் ருலும் அதை அங்கெல்லாம் நீங்கள் வாங்கிவிட முடியாது. எந்தக் கடைகளிலிருந்து ஸ்கூல் முதலாளிக்குச் சரியான கமிஷன் கிடைக்குமோ, அங்கேதான் படிக்கிற அத்தனை குழந்தைகளும் வாங்கியாக வேண்டும். தைக்கிற இடத் தைக்கூட அவர்கள் சொல்கிறபடிதான் நீங்கள் தேடிப் போக வேண்டும்.

எம்.ஏ., பி.ஏ., பி.இ.டி., எம்.இ.டி. படித்துவிட்டு இம்மாதிரிப் பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், ஆசிரியை களாகவும் வேறு வழியின்றி நுழைந்திருப்பவர்களின் நிலைமையைத் தனியே தேடிப் போய் விசாரித்தால், பரிதாபகரமாக இருக்கும். மிரட்டலுடன் அமர்த்தப் பட்டு, மிகக் குறைந்த மாதக் கூலியில் அவர்கள் விரக்தி யுடனும், வெறுப்புடனும் அந்த வேலைகளில் ஒட்டிக் கொண் டிருப்பார்கள். இவ்வளவு விலையுயர்ந்த கல்வியைத் தருகிற இடத்தில் பகல் உணவுக்குப் பொட்டலங்களுடனும், டிபன் பாக்ஸுகளுடனும் தங்கள் தங்கள் குழந்தைகளைத் தேடி வரும் அருமைப் பெற்ருேர்கள் ஒதுங்கத் தேவையான இட வசதி, குடிக்கக் குடிநீர் வசதி ஒன்றும் இருக்காது. நடுப் பகலில் தெருவோரத்திலும், நடை பாதைகளிலும் பெற் ருேர்கள் வெயிலில்-மழையில் காத்திருப்பார்கள். குடி தண்ணீர், கை கழுவத் தண்ணிர் முதல் சகலமும் பெற் ருேர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருப்பார்கள் ஸ்கூலில் அவை கிடைப்பது அரிது.

மணி அடித்ததும் சிறையிலிருந்து விடுதலை செய்யப் படுவதுபோல் விடுபட்டு ஓடி வரும் குழந்தைகளுக்கு, நடை பாதையிலும், தெரு ஓரத்திலும் வைத்தே சாப்பாடு போட்டு மறுபடி அனுப்ப வேண்டியிருக்கும். ஒரு வகுப்பில் 40 முதல் 50 வரை குழந்தைகள் அடைபடுவதால் ஆசிரிய ருக்குக் குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்த முடியாது. இம்மாதிரி நர்ஸரிப் பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தையின் மீதும் தனிப்பட்ட அக்கறை வைப்பது மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/120&oldid=562362" இலிருந்து மீள்விக்கப்பட்டது