பக்கம்:சிந்தனை வளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 11 9

முக்கியம். கார்ப்பொரேஷன் எலிமெண்ட்ரி ஸ்கூலை விட அதிகமாக-இப்படி விலையுயர்ந்த பள்ளிகளில்-நாம் எதிர் பார்ப்பது, விசேஷ கவனிப்புத்தான். ஆனால், இங்கோ வருஷத்துக்கு ஒரு குழந்தைக்கு ஆயிரக்கணக்கில் செலவழித் தும்கூடச் சாதாரண கவனிப்புக் கூடக் கிடைப்பதில்லை.

இங்கே நமது கல்லூரிகளில் எம். ஏ. முதலிய போஸ்ட் கிராஜுவேட் வகுப்புக்களுக்கு ஒரு வருடம் முழுவதும் ஒரு மாணவன் கட்டவேண்டிய கட்டணம் ரூ. 500-க்கு அதிக மாகாது என்ருல், சில இங்கிலீஷ் மீடியம் நர்ஸ்ரி பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு ஃபீஸ், டியூஷன், உடை, போக்குவரத்துச் செலவு, டொனேஷன் எல்லாம்சேர்ந்து வருடம் ரூ. 2500 முதல் ரூ. 3000 வரை ஆகி விடுகிறது. இப்படி ஒப்பு நோக்கிளுல்தான் இதன் கொடுமை உங்களுக்குப் புரிய முடியும்.

விதி விலக்காக மிகச் சில நல்ல நாணயமான பள்ளிகள் எங்கும் உண்டுதான். ஆனால், வியாபாரம்தான் அதிகம். வெறும் வியாபாரமாகவும் தெரியவில்லை.

இது நிச்சயமான கள்ள மார்க்கெட் வியாபாரமாகவே தான் இருக்கிறது. மெய்யான கல்வியறிவுதான் கள்ள மார்க்கெட்டை ஒழிக்க வழி என்பார்கள். நாமோ கல்வி ஆயறிவையே கள்ள மார்க்கெட்டில் விற்கவும், வாங்கவும் துணிந்து விட்டோம்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்பதை "எழுத்தறிவு விற்றவன் குபேரன் ஆவான்’ என்று இனி ஆமாற்றலாமா? - ,★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/121&oldid=562363" இலிருந்து மீள்விக்கப்பட்டது