பக்கம்:சிந்தனை வளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சொல் ஊதாரித்தனம்

'நிறை குடம் தளும்பாது’-என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. பழமொழியின் மறுபக்கத்து அர்த்த மாகக் குறை குடம் தளும்பும்’ என்பதும் தெரிய வருகிறது. முழுமையாக நிரம்பியிருக்கிற குடம் தளும்பி வழிந்து, தன்னிடம் சேர்ந்திருக்கிற நீரைக் கொஞ்சமும் வீணுக்காது. ஆனால் அரைகுறையாகத் தண்ணிரைக் கொண் டிருக்கிற குடமோ, தளும்பி வழிந்து அங்கும் இங்கும். அலைபாய்ந்து கண்டபடி சிந்தி விளுக்கும்; விரயம்ாக்கும்.

நமது பிரசங்கங்கள், பொது நிகழ்ச்சிகளுக்குப் போகும். போதெல்லாம் இந்தப் பழமொழி எனக்கு நினைவு வரு வ. துண்டு. சொற்களை எப்படி எப்படியெல்லாம் நோக்கமும் பயனும் இல்லாமல் ஊதாரித்தனமாகவே செலவழிக்கலாம். என்று தெரிந்து கொள்ள வேறு எங்கும் போக வேண்டாம். நமது கூட்டங்கள் சிலவற்றுக்குப் போனலே போதுமானது. :வார்த்தைச் சிக்கனம்-என்பது என்னவென்றே. தெரியாதபடி சொல்மாரி பொழியும் பேச்சாளர்கள் நம்மிடையே ஏராளமாக இருக்கிருர்கள்.

தெரிந்தோ தெரியாமலோ, தமிழ் மேடைப் பேச்சுக்குச் சொற்பொழிவு' என்றுதான் பெயர் வைத்திருக்கிரு.ர்கள். சொற்களைப் பொழிவது” என்ற அதன் நேரடி அர்த்தம் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்!

சொற்பெருக்கு, சொல்மாரி, சொற்பொழிவு என்ற பெயர்கள் எல்லாவற்றிலும் அவற்றை ஏற்படுத்தியவர். களுக்கு நல்லெண்ணம் இருக்கலாமோ என்னவோ? ஆல்ை, இன்று அவற்றைப் பயன்படுத்துகிறவர்களைக் கவனித் தால் கிண்டலான அர்த்தம்தான் நமக்குத் தோன்றுகிறது.

ஒருவரை நிறை குடம்’ என்று முடிவு செய்வதற்குப் பேச்சிலும், எழுத்திலும், மொழியை உபயோகிக்கிற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/122&oldid=562364" இலிருந்து மீள்விக்கப்பட்டது