பக்கம்:சிந்தனை வளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 夏2董

எல்லாச் சாதனங்களிலும் சொற் சிக்கனத்தை அவர் எவ்வளவிற்குக் கடைப் பிடிக்கிருர் என்பதை முக்கியமாகக் .கவனிக்க வேண்டும். - ~ *

பழைய தமிழ் இலக்கணங்களில் நூலாசிரியனுக்கு, எழுதுகிறவனுக்கு, பேசுகிறவனுக்கு எது எது ஆகாத குணங் கள் என்று பட்டியல் கொடுத்திருக்கிருர்கள். ஆகாத குணங் களில் முக்கியமானதாக வருவது சொற் பல்குதல்’ {வார்த்தைப் பெருக்கம்) ஆகும். அதாவது அர்த்தமில்லாத வார்த்தைகளே அடுக்குவது மிகப் பெரிய குற்றம் என்ப்து பழைய இலக்கணங்களின் கருத்து.

இன்ருே அர்த்தமில்லாத வார்த்தைகளை வைக்கோற் போராகக் குவித்து, அதையே ஒரு திறமையாகக் காட்டி மருட்டுவதுதான் நம்மைச் சுற்றி அதிகமாக இருக்கிறது.

ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை, அதே நேர்த்தியுடன் அறுநூறு ரூபாயிலேயே சிக்கனமாக முடித்துக் கொண்டு வருகிறவனுடைய திறமை யைப் பாராட்டுகிருேமே, அதுபோல நூறு வார்த்தைகளில் சொல்லி விளக்க வேண்டிய ஒன்றை, எழுபது வார்த்தை களிலேயே கச்சிதமாகச் சொல்லுகிறவனுடைய திறமையை

யும் பாராட்ட வேண்டும். -

ஆனால், பணச் சிக்கனம் பாராட்டப்படுகிற இந்நாட்டில் சொற் சிக்கனத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

அந்தப் பெண் கிணற்றிலிருந்து பானையில் தண்ணீர் கொண்டு வந்தாள்’-என்ற வாக்கியத்தில் ஒவ்வொரு வ ார் த் ைத யு ம் அர்த்தத்தோடும் அவசியத்தோடும் நிற்கிறன. அநாவசியமான ஒரு சொல்கூட அதில் இல்லை. அதே வாக்கியத்தை, வானில் வட்டமிடும் தேன் நிலவு போலும் சிங்கார முகத்தையுடைய அந்தப் பருவச் சிட்டு, கிணற்றுக் கேணியிலிருந்து பான்ைக் குடத்தில் பளிங்கெனத் தண்ணீரைக் கொண்டு அணங்கென மென்னடை நடந்து வந்தாள்'-என்று எழுதுவதுதான் இப்போது ஃபாஷனகி வருகிறது. வார்த்தை ஊதாரித்தனத்திற்குச் சரியான உதாரணம் இந்த வாக்கியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/123&oldid=562365" இலிருந்து மீள்விக்கப்பட்டது