பக்கம்:சிந்தனை வளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟罗罗 சிந்தனை வளம்

ஒரே முகத்தில் விகாரமாக நூறு பாலுண்ணிகளைப் பார்ப்பது போல், ஒரே கையில் முத்து முத்தாகச் சொறி சிரங்கு அப்பியிருப்பதுபோல், கல்லத்தி மரத்தின் கிளை, இலை, தண்டு எல்லாவற்றிலும் விகாரமாகக் காய்கள் காய்த்து மொய்த்திருப்பது போல், தேவையற்ற வார்த் தைப் பெருக்கம் விகாரமாகவும், அருவருப்பூட்டக் கூடிய விதத்திலும் இருக்கிறது.

வார்த்தைகளைப் பற்றிய விரக்ஞையோடு, அவற்றைத். தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். அவசியமும் அர்த்தமும் பார்த்து உபயோகிக்க வேண்டும். குறைந்த வார்த்தைகளை உபயோகித்து அதிக அர்த்தத்தை அடைய வேண்டும். அதிக வார்த்தைகளை உபயோகித்துக் குறைந்த அர்த்தத்தை அடையக் கூடாது. படாடோபமான வார்த். தைகளை உபபோகிப்பது இப்போது சர்வசாதாரணமான வழக்கமாகி வருகிறது. -

அதிக வார்த்தைகளை உபயோகித்தால் குறைந்த உணர் வையும், குறைந்த சிக்கனமான வார்த்தைகளை உபயோகிப் பதால் அதிக உணர்வையும் அடையலாம் என்பது எல்லா மொழிகளிலும் சாத்தியமான நுணுக்கம். -

“I request you to speak’—argåruso 3Guy #16 offlá), "நான் உங்களைப் பேசுமாறு வேண்டி விரும்பி மன்ருடிக் கேட்டுக் கொள்கிறேன்-என்பது போல் கூறுகிரு.ர்கள். இதில் வேண்டி, விரும்பி, மன்ருடி’ என்கிற மூன்று வார்த். தைகளும் சேர்ந்து ஒரே அர்த்தத்தைத்தான் தருகின்றன. ஒரே அர்த்தத்தைத் தர மூன்று வார்த்தைகள் எதற்கு? ஒரு முறை குறி வைத்து ஒன்றைச் சுட்டு முடித்தபின், அதே. பிராணிக்காக மேலும் வீணே குண்டுகளைச் செலவழிப்பது வேட்டைக்காரனின் பிழையாவது போல், கெட்டிக்கார மொழி அறிஞன் வார்த்தைகளை இலக்குப் பார்த்துத் தவருத அர்த்தத்தோடு பயன்படுத்த வேண்டும். செத்த,

பாம்பை அடிப்பதுபோல், ஒரு வார்த்தையால் அர்த்தம்.

கிடைத்த பின் அதே அர்த்தத்தைத் தருகிற வார்த்தை, ளையே மேலும் அடுக்கிப் பயன்படுத்துவது கேவலமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/124&oldid=562366" இலிருந்து மீள்விக்கப்பட்டது