பக்கம்:சிந்தனை வளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நமக்குப் புரிந்த கன்தந்திரம்

‘எங்கே நம்மை அடக்கியாள விரும்புகிருர்களோ அங்கே நாம் சுதந்திரமாக இருக்க முயல வேண்டும். எங்கே நம்மைச் சுதந்திரமாக விட்டு விடுகிருர்களோ அங்கே நாம் மிகவும் அடக்கமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டும்’ என்பது சுதந்திரத்தைப் பற்றிய என் கொள்கை-அதாவது நான் அதைப் புரிந்துகொண்ட விதம்.

"சுதந்திரம்' என்பதைப் பெரும்பாலான இந்தியர்கள் எப்படிப் புரிந்து ஏற்றுக் கொண்டிருக்கிருர்கள் என்று. ஊடுருவிப் பார்த்தால் மிகவும் வேடிக்கையாயிருக்கும். சில இடங்களில் அதிர்ச்சியாகவும் கூட இருக்கும்.

எதிலும் பற்றின்றி, எதைப்பற்றியும் பொறுப்புணர்ச்சி இன்றி விட்டேற்றியாக இருப்பது வேறு, சுதந்திரமாக இருப்பது வேறு. தான்தோன்றித்தனமாக நடந்து கொள் வதும் சுதந்திரமாக இருப்பதுவும் ஒன்றல்ல. அசல் சுதந் திரம் பொறுப்பு உணர்ச்சியுடன் அனுபவிப்பது. தான் தோன்றித்தனமானது பொறுப்புணர்ச்சியின்மை.

தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதையே சுதந். திரம் என்று புரிந்து கொண்டவர்கள்தான் நம் நாட்டில் அதிகம். சுதந்திரமாக வாழ்வது என்ருல் எந்தப் பொறுப்பு உணர்ச்சியும், சுமையும் இல்லாமல் இஷ்டம்போல் இருப்பது என்ற சுலபமான விளக்கம் ஒன்று அடிக்கடி பலரால் தரம் படுகிறது. இப்படி நிறையப் பேசவும் எழுதவும்பட்டு, இதுவே இங்கு ஒரு வெகுஜன சித்தாந்தமாகவும் உருப் பெற். றிருப்பதுபோல் தெரிகிறது. . - -

உண்மையில் அடிமையாக இருப்பவனைவிடச் சுதந்திர

மாக இருக்க விரும்புகிறவனுக்குத்தான் பொறுப்புக்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/128&oldid=562370" இலிருந்து மீள்விக்கப்பட்டது